Skip to main content

சிமெண்ட் துறையிலும் கால் பதிக்கிறது அதானி! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

Adani affects quarter in cement sector too!

 

நாட்டின் மிகப்பெரிய இரண்டு சிமெண்ட்ஸ் நிறுவனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அதானி நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. 

 

ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹோல்சிம் (HOLCIM) நிறுவனத்திற்கு சொந்தமான அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்கள், 70 மில்லியன் டன் உற்பத்தியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இந்த நிலையில், இவ்விரு சிமெண்ட் நிறுவனங்களையும் 86,000 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அதானி நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சிமெண்ட் துறையில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக அதானி நிறுவனம் உருவெடுக்கவுள்ளது. 

 

பில்ராவின் அல்ட்ராடெக் நிறுவனம், தற்போது 117 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்து சந்தையில் முதலிடத்தில் உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்