Skip to main content

குழந்தை தொழிலாளர்களில் 80-90% சிறுவர்கள் பட்டியலினத்தவர்கள்... அரசு ஆய்வில் அதிர்ச்சித் தகவல்...!

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

child labour

 

தெலுங்கானா மாநிலத்தில், மாநில தொழிலாளர்கள் நலத்துறை, குழந்தை தொழிலாளர்கள் சம்மந்தப்பட்ட ஒரு ஆய்வை பத்து மாவட்டங்களில் மேற்கொண்டது. இந்த ஆய்வு இரு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில் முதல் கட்ட ஆய்வு தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட ஆய்வுகள் மேற்கொண்டுபட்டு வருகிறது.  இதன் அதிகாரப்பூர்வ முழுத் தகவல்கள் ஏப்ரல் இறுதியில் வெளியாகவிருக்கிறது. 
 

இந்நிலையில் தற்போது முதல் கட்ட ஆய்வு நிறைவு பெற்றிருக்கும்தருவாயில், அதன் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 80% முதல் 90% குழந்தை தொழிலாளர்கள், பட்டியல் இனத்தவர்களை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. அதாவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 9,724 குழந்தைகள் பட்டியலினத்தவர்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 
 

இதில் 6 முதல் 8 வயது உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 15 எனவும், மேலும் 1,605 குழந்தைகளின் வயது 9 முதல் 14-க்குள் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக 15 முதல் 18 வரையிலான வயது உள்ளவர்கள் 8,105 பேர் பணிபுரிவதாகத் தெரியவந்துள்ளது. இவர்கள் யாரும் பள்ளிக்கு செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தில் 2016-ல் மேற்கொண்ட திருத்தத்தின்படி 14 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இளம் பருவத்தினர் எனவும், இவர்களை ஆபத்தான பணி சூழல் உள்ள தொழிற்சாலைகளில் பணி அமர்த்துவதோ, ஈடுபடுத்துவதோ குற்றம் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.
 

இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி முதல் இந்த (பிப்ரவரி) மாதம் தொடக்கம் வரை இதே தெலுங்கானா மாநிலத்தில் கிட்டத்தட்ட 2,119 குழந்தை தொழிலாளர்கள்  ‘ஆப்ரேஷன் ஸ்மைல்’ எனும் செயல்பாட்டின் மூலம் மீட்கப்பட்டனர். இதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 466 என்பது வருந்தத்தக்கது. 
 

அந்த மீட்பு நடவடிக்கைக்கு பின் தெலுங்கானா காவல்துறை தரப்பில் வெளியிட்ட அறிவிப்பில், மொத்தம் 2,119 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 1,653, மற்றும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 466 எனும் தகவலை தெரிவித்திருந்தது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறைச்சிக் கடையில் குழந்தை தொழிலாளர் சிறுவன் மீட்பு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Rescue of child labor boy in butcher shop

இறைச்சிக் கடையில் குழந்தை தொழிலாளியாக சிறுவன் அமர்த்தப்பட்ட நிலையில், குழந்தைகள் நலக்குழுவினரால் மீட்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு சூளை பாரதி நகரில் சத்தியமங்கலம் பிரதான சாலையில் உள்ள கறிக் கடையில், சிறுவன் பணியில் இருப்பதாக 1098 என்ற குழந்தைகள் ஹெல்ப் லைன் எண்ணிற்கு தகவல் வந்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் 14 வயது நிரம்பாத சிறுவன் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில் 6ம் வகுப்பு வரை மட்டுமே பயின்று பள்ளியிலிருந்து இடைநின்ற சிறுவன், பல மாதங்களாக இறைச்சிக் கடையில் தினக்கூலியாக வேலை செய்து வந்தது உறுதியானது. இதையடுத்து சிறுவனை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு அழைத்துச் சென்றனர். சிறுவனை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்த 14 சிறுவர்கள் மீட்பு

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

 Rescue of 14 children who were begging on Kriwala Path

 

திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 14 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

 

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் கிரிவல பாதையைச் சுற்றி பல்வேறு கோயில்கள் இருக்கின்றன. மாதத்தின் முக்கிய நாட்களில் இங்கு கிரிவலத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடுகின்றனர். இந்த நிலையில் பொம்மை விற்பதாக திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் பிச்சை எடுக்க வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 14 சிறுவர்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் போலீசார் சேர்த்துள்ளனர். இதில் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைத்த இடைத்தரகர்கள் ஓட்டம் பிடித்த நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.