Skip to main content

மூன்று மாநில தேர்தல்; வாக்குப்பதிவு நிலவரம்!

 

goa

 

கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மாலை 3 மணி நிலவரப்படி 51.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த இரண்டாம் கட்ட தேர்தலில், ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

கோவாவில் மதியம் 3 மணிவரை 60.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் மதியம் 3 மணிவரை 49.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.