மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 45-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் இன்று காலை நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது.
அதேபோல் ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் மீது ஐந்து சதவீத ஜி.எஸ்.டி விதிப்பது தொடர்பாகவும் இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவெடுக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் கூறின. இந்தநிலையில் கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வரும் 11 மருந்துகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் வரிச்சலுகையை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க ஜி.எஸ்.டி கவுன்சிலில் முடிவெடுக்கப்படும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.