Skip to main content

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சி - காங்கிரஸ், திமுக உள்பட 14 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

1946ஆம் ஆண்டில் இதே நவம்பர் 26ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையொட்டி இந்தநாளை அரசியலமைப்பு நாளாக கொண்டாட மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு முடிவெடுத்தது. அதன்படி ஆண்டுதோறும் இந்த அரசியலமைப்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

அந்தவகையில், இன்று (26.11.2021) கொண்டாடப்படும் அரசியலமைப்பு நாளை முன்னிட்டு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுத் தலைவரும், பிரதமரும் உரையாற்றவுள்ளனர். அதேநேரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இந்த அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி, சிவசேனா, இடதுசாரிகள் உள்ளிட்ட 14 கட்சிகள், மத்திய அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்காதது, சட்டங்களை விவாதமின்றி நிறைவேற்றுவது ஆகியவற்றைக் கண்டித்து இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாகவும், மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் கேட்டுக்கொண்டதையடுத்து எதிர்க்கட்சிகள் இந்த முடிவினை எடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்