Skip to main content

பட்டப்பகலில் பெண் வெட்டிக் கொலை... தலையைத் தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்! 

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

woman who involved in Dindigul Pasupathi Pandiyan case was passes away

 

திண்டுக்கல்லில் தங்கியிருந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன், கடந்த 2010ஆம் ஆண்டு இ.பி.காலனியில் உள்ள அவரது வீட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார், கோழி அருள், புறா மாடசாமி, நந்தவனபட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவி உட்பட 14 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவி மீது பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட புறா மாடசாமி உட்பட 4 பேர் ஏற்கனவே கொலை செய்யப்பட்டுள்ளனர். 

 

woman who involved in Dindigul Pasupathi Pandiyan case was passes away

 

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு நிர்மலாதேவி நடந்து செல்லும் போது மர்ம நபர்கள் சிலர் அவரை சுற்றிவளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். அதன்பின் நிர்மலாதேவி தலையை அந்த மர்ம நபர்கள் தூக்கிச் சென்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் சென்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட நிர்மலாதேவியின் தலையை அந்த மர்ம நபர்கள், இ.பி.காலனியில் உள்ள பசுபதி பாண்டியனின் வீட்டில் அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் வீசியுள்ளனர்.

 

woman who involved in Dindigul Pasupathi Pandiyan case was passes away

 

இதனைக் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நிர்மலா தேவி கொலை செய்யப்பட்ட சம்பவமும், பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட இடத்தில் நிர்மலா தேவியின் தலையை வீசியிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது