Skip to main content

சிவச்சந்திரன் உடலுக்கு நிர்மலாசீதாராமன் அஞ்சலி - பொதுமக்கள் கண்ணீர்

Published on 16/02/2019 | Edited on 16/02/2019
ns

 

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவப் படை வீரர் அரியலூரைச் சேர்ந்த சிவச்சந்திரன்  உடல் இன்று காலை 11.45 மணிக்கு திருச்சிக்கு வந்தது.    திருச்சி விமான நிலையத்தில் சிவச்சந்திரன் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.  ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

 

ni

 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவச்சந்திரன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி  செலுத்தினார். அஞ்சலிக்கு பின்னர் சிவச்சந்திரன் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.  

 

t

 

தமிழிசை சவுந்தரராஜன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.   தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிவச்சந்திரன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.   

 

n

 

வளர்மதி, எம்.பி. குமார், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ முருகேஸ்வரி, பிஜேபி மாநில தலைவர் தமிழிசை, திமுக சார்பில் அன்பில் மகேஷ், லால்குடி சௌந்திரபாண்டியன், திமுக நகர செயலாளர் அன்பழகன், பிஜேபி கோவிந்தன், தா.ம.க புலியூர் நகராஜ், உள்ளிட்டோர் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.  பல்வேறு கட்சியினரும், பல்வேறு இயக்கத்தினரும் திரண்டு வந்து மலர்வளையம், மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

 

ty


சிவசந்திரன் உடல் வந்தவுடன் அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் we want Revenge என்று கோஷங்கள் எழுப்பியப்படியே இருந்தனர். இதன் பின்னர் சிவச்சந்திரன் உடல்  சொந்த ஊரான கார்குடிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புல்வாமா தாக்குதல்: பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

 

pulwama attack


 

கடந்த பிப்ரவரி  14ம் தேதி ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற வேனில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்ரமணியன், சிவச்சந்திரன் ஆகிய வீரர்களும் இறந்தனர். 

 

தற்போது சுப்ரமணியின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சிவச்சந்திரனின் மனைவி ஜெயந்திக்கும் அரசு வேலைக்கான பணிநியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.