Rain on the Nagapattinam  Holidays for schools!

நாகை மாவட்டத்தில் கொட்டி தீர்த்துவரும் கனமழையால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

நாகை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று முதல் தட்பவெட்ப நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து, இரவு முதல் கொட்டிதீர்த்த கனமழை விடியற்காலை 7 மணி வரையிலும் விடாது பெய்தது.

Advertisment

குறிப்பாக நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர், திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீர் பெய்த கனமழையால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.