Skip to main content

துரோகம் செய்துவிட்டார்... புதுச்சேரி திமுக எம்எல்ஏ பேட்டி

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

ddd

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான நாராயணசாமி அரசு இன்று (22.02.2021) காலை பெரும்பான்மை நிருபிக்க முடியாமல், பதவியை ராஜினாமா செய்தது. இதுகுறித்து புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா பேட்டி அளித்துள்ளார். 

 

எந்த வித்தையையாவது காட்டி ஆட்சியைத் தக்க வைப்பார் நாராயணசாமி என்று காங்கிரஸ் கட்சியினரே சொல்லி வந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளாரே?

 

மக்களைச் சந்திக்காமல் நியமன எம்எல்ஏக்களாக இருந்தவர்களை வைத்து ஆட்சியைக் கலைத்துள்ளனர். இதுதான் ஜனநாயக படுகொலை. 

 

திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுகிறதே?

 

இடையில் வந்தார். இடைத்தேர்தலில் அவரை நாங்கள் ஜெயிக்க வைத்தோம். கட்சியின் செல்வாக்கால் அவர் வெற்றி பெற்றார். தற்போது துரோகம் செய்துவிட்டார். அவருக்குப் பல்வேறு நெருக்கடிகள் கொடுத்துள்ளனர். அதனால்தான் சென்றுள்ளார். இதுகுறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். 

 

திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கு என்ன செய்தது என்று அதிமுகவும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் கேள்வி எழுப்பியுள்ளதே?

 

இதுதொடர்பாக அவையில் இன்று நாராயணசாமி அருமையாக பேசியுள்ளார். இந்த அரசு என்ன செய்தது, என்ன செய்யவில்லை, செய்ய முடியாததற்கு என்ன காரணம், எதை எதை தடுத்தார்கள், பாண்டிச்சேரியின் மொத்த நிதி ஆதாரம் என்ன? என்னென்ன திட்டங்கள் பாண்டிச்சேரிக்கு வருவதை நிறுத்தினார்கள்? ஜி.எஸ்.டி.யில் எவ்வளவு வரவேண்டியுள்ளது, எவ்வளவு கொடுத்தார்கள், எவ்வளவு கொடுக்கணும் எனப் பேசியுள்ளார்.

 

ஆளுநர் தலையீடு அதிகமாக இருந்த நேரத்திலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி என்னென்ன செய்தது என்று நாராயணசாமி பட்டியலிட்டுள்ளார். அதனை இந்த அதிமுகவினரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும் கேட்டுக்கொண்டுதான் இருந்தனர். இதே அதிமுக எம்எல்ஏக்கள், ஆளுநர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள். மத்திய அரசு இந்த ஆளுநரை வைத்து தொல்லை கொடுப்பதாகவும் அவர்கள் பேசியிருக்கின்றனர். 

 

புதுச்சேரி திமுகவின் அடுத்தக் கட்ட பணி என்ன?

 

திமுக தலைவர் என்ன சொல்கிறாரோ அதனை செய்வோம். என்ன செய்ய வேண்டும் என்று தலைவருக்குத் தெரியும். அவர் சொல்வதை செய்வோம். 

 

 

சார்ந்த செய்திகள்