Skip to main content

சந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்!!! அய்யாக்கண்ணு கவலை...

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
ddd

 

 

இந்திய தலைநகா் டெல்லியில் வட மாநிலங்களை சோ்ந்த விவசாயிகள் மத்திய அரசு இயற்றிய புதிய விவசாய சட்டத்திற்கு தங்களுடைய எதிர்ப்பை தொடா்ந்து தெரிவித்துவரும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் விவசாயிகளை டெல்லிக்கு செல்ல அனுமதிக்காமல் அவர்களை வீட்டு காவலில் வைத்து, போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்காமல் இருக்கிறது. 

 

இருப்பினும் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை கைவிடாமல் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாவட்ட வாரியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனா். 

 

இந்த சட்டம் குறித்து பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவரும் வழக்கறிஞருமான அய்யாக்கண்ணு, ''முதலில் இந்த வேளாண்மை சட்டம் என்பது மத்திய அரசு இயற்ற அவா்களுக்கு அதிகாரம் இல்லை. இது அந்தந்த மாநிலங்கள் அரசுகளுடைய உரிமை. அதை மத்திய அரசு கையில் எடுப்பது ஏற்புடையது அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு நவம்பா் 7ஆம் தேதி புதிய வேளாண் சட்டத்தை இயற்றியது. அந்த சட்டத்தின் முக்கியமான சாரம்சம் இந்தியாவில் உள்ள விவசாயிகளில் சொந்தமாக 1 ஏக்கா் நிலம் வைத்திருந்தாலும் சரி 100 ஏக்கா் நிலம் வைத்திருந்தாலும் சரி அவா்கள் அனைவரும் கார்ப்பரேட் நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட வேண்டும். 

 

அந்த ஒப்பந்தத்தின்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் விதைகளை மட்டுமே பயிரிட வேண்டும். அதில் கிடைக்கும் உற்பத்தியை அந்த கார்பரேட் நிறுவனமே வாங்கி கொள்ளும், ஒருவேளை பயிரிடப்பட்ட காலகட்டத்தில் இயற்கை சீற்றங்களால் பயிர்கள் சேதமடைந்து அழிந்தாலோ அதற்கான எந்த இழப்பீடையும் நிறுவனங்கள் ஏற்காது'' என தெரிவித்தார்.

 

மேலும். ''நிறுவனங்கள் பயிரிட வழங்கும் விதைகள் அனைத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறிய அவா், கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசானது மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்த எந்த முயற்சியையும் அவா்கள் எடுத்தது இல்லை. அதற்கு காரணம் நாம் இருவா் நமக்கு இருவா் என்பது, இன்று நாமே இருவா் நமக்கு ஏன் இன்னொருவா் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

 

அதற்கு காரணம் இந்த மரபணு மாற்று விதைகள் கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவிற்குள் விவசாயத்தை பெருக்கினால் ஆண்கள் ஆண்மை இழந்து, பெண்கள் மலட்டு கா்ப்பத்தோடு இருப்பார்கள்'' என தெரிவித்தார். 

 

''இந்த சட்டத்தின் மூலம் எந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏமாற்றினாலும் அவா்கள்மீது நீதிமன்றத்தில் வழக்கோ, காவல்நிலையத்தில் புகாரே கொடுக்க முடியாது. அந்தந்த மாவட்ட ஆட்சியா் அல்லது வருவாய் துறை அதிகாரிகளிடம் மட்டுமே மனு கொடுக்க முடியும். 

 

உதராணத்திற்கு ஒரு விவசாயி அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் தங்களுடைய நெல் மூட்டைகளை கிலோ ரூ.19க்கு கொடுக்க முடியும். ஆனால் தனியார் கொள்முதல் நிறுவனங்கள் ரூ.17.80க்கு வாங்கி கொண்டு பணத்தை உடனடியாக கொடுக்காமல் காலதாமதமாய் கொடுக்கும் நிலையில் நெல்லின் தரம் சரியில்லை எனவே ரூ.15 தான் கொடுப்பேன் என்று அந்த நிறுவனங்கள் சொல்கிறது, இன்றும் இதே நிலை நீடிக்கிறது. 

 

கரும்பு ஒரு டன் விலை 2750க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இன்று அதற்கு வெட்டு கூலி ஒரு டன்னுக்கு 1000 ரூபாய் கொடுக்க வேண்டும். இதில் விவசாயி எந்த இடத்தில் லாபம் பெறுகிறான் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். 

 

நான் 20 ஆண்டுகாலம் பாஜகவில் இருந்தேன். பாரதிய கிஷான் சங்கத்தில் இருந்த நான் மோடியை முதல் தடவை சந்தித்தபோது 6 மாதங்களில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி விடுவேன் என்று கூறினார். 6 மாதங்களுக்கு பிறகு அவரை மீண்டும் சந்தித்தேன் சும்மா வந்து தொந்தரவு செய்யக்கூடாது எல்லாம் முறைபடி தான் நடக்கும் என்று கூறினார். அன்று வெளியே வந்து ஆரம்பித்தது தான் இந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம். 

 

1970ல் விவசாயி பொருட்களுக்கும், அரசாங்க பணியாளா்களுக்கும் ஒரே விலை, சம்பளம் இருந்தது. ஆனால் இன்று 2020ல் விவசாய பொருட்களின் விலை ஒரு டன் கரும்பு ரூ.2750, ஆனால் அரசு அதிகாரியின் சம்பளம் 1 லட்சத்திற்கும் மேல் தான் வழங்கப்படுகிறது. ஆனால் இன்று வரை உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கு விலை என்பது கேள்விகுறி தான்? 

 

மன்கிபாத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி நாங்கள் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் செய்து முடித்திருக்கிறோம் என்று வாய் கூசாமல் கூறுகிறார். அவா் விவசாய உற்பத்தி பொருளுக்கு என்னுடைய ஆட்சியில் நான்கு மடங்கு அதிக விலையை தருவேன் என்று தோ்தல் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இன்று மத்திய அரசு 1 கிலோ நெல் 18.88 பைசா, இதற்கு முன்பு ரூ.14 இருந்தது, 4 மடங்கு உயரவில்லை ரூ.4 ரூபாய் உயா்ந்திருக்கிறது. 

 

மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை ஒடுக்கும் சட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. விவசாய சட்டங்களை இயற்ற மத்திய அரசிற்கு உரிமை இல்லை. அது மாநில அரசு முடிவு செய்ய வேண்டியவை. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை விவசாயிகளாகிய எங்களுடைய போராட்டம் தொடரும். கண்டிப்பாக மீண்டும் டெல்லியில் தமிழக விவசாயிகளின் குரல் ஒலிக்கும்.

 

ஒரு விவசாயிக்கு வீட்டிற்குள்ளும் மரியாதை இல்லை, நாட்டிற்குள்ளும் மரியாதை இல்லை. விவசாயிகள் இல்லை என்றால் நாளை கார்பரேட் நிறுவனம் கொடுக்கும் உணவை மட்டும் தான் சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்படும். விவசாயிக்கு மாதம் 5 ஆயிரம் பென்சன் கேட்டால் மாதம் 500 ரூபாய் தருகிறார்கள். விவசாயிகள் அங்கீகரிக்கபடாத வரை காரப்பரேட் நிறுவனங்கள் பிடியில் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் சிக்கி தன்னுடைய ஆண்மையை இழந்து சந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்'' என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” -  அய்யாக்கண்ணு

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Ayyakannu said that Cm Stalin should fast for kaveri issue  

 

திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவாக இன்று அளித்தனர். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல விவசாயிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மாவட்ட வருவாய் துறை அலுவலர் அபிராமி பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், “காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பது கிடையாது. இதனால் காவேரி டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு வாங்கி காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

 

கடந்த 2021-ம் ஆண்டு குழுமணியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு நியாயம் கேட்டு 24 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவராகிய என் மீது 6 வழக்குகளும், என் சங்கத்தை சார்ந்த விவசாயிகள் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

குறிப்பாக, திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டதை போல என் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடுவதற்காக காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு காரணமான திருச்சி மாவட்ட துணை கமிஷனர் அன்பு மற்றும் காவல்துறையினரை கண்டிக்கின்றோம்” என்றார்.

 

 

 

 

Next Story

மத்திய அரசின் உத்தரவை மதிக்காத வங்கிகள்; விவசாயிகள் கொந்தளிப்பு

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

bank managers disobey union government rules  for farmers loan related issue

 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சார்பில்  திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், "மத்திய அரசின் திட்டங்களான பென்ஷன், மாதம் 500 ரூபாய் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, கைம்பெண் உதவித் தொகை, வயது முதிர்ந்தோர் உதவித் தொகை மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணத்தை அவர்கள் வாங்கிய கடனுக்காகப் பிடிக்கக் கூடாது என்று மத்திய அரசு கூறிய பிறகும்.. 10 லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து விட்டு 10,000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்களுக்காக அந்த தொகைகளைப் பிடிக்கும் வங்கி மேலாளர்களைக் கைது செய்யக் கோரி வங்கிக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்றார்.

 

இதனைத் தொடர்ந்து வங்கிக்கு பூட்டு போட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் பிரச்சனை தொடர்பாக மனு ஒன்று எழுதி வங்கி மேலாளரிடம் கொடுங்கள் என்று வலியுறுத்தினர். இருப்பினும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் வரை வங்கியில் காத்திருந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வங்கியின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

வங்கியின் மண்டல அதிகாரி விவசாயிகளுக்கு இது குறித்து உரிய பதில் கூறுவதற்கு முன்வராததால் விவசாயிகள் மீண்டும் வங்கியின் வளாகத்திற்குள் நுழைந்து வங்கிக்கு பூட்டு போடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.