Published on 04/10/2021 | Edited on 04/10/2021
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவத்திற்கான நோபல் பரிசை அறிவித்தது தேர்வுக் குழு. அதன்படி, 2021ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. வெப்பம், வலி, உடல் அழுத்தம் ஆகியவற்றைத் தொடாமல் உணரக்கூடிய கருவி (சென்சார்) கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள், நரம்பியல் மண்டலத்தின் உணர்திறன் அமைப்பு செயல்பாடுகளைத் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர்.