Skip to main content

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம்

Published on 06/09/2018 | Edited on 06/09/2018


ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்யக்கூடாது என மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, அதில்.. பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்தது. இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தன் மரணம்; கலங்கி கண்ணீர் சிந்திய நளினி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு,  மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சீமான், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள்  அஞ்சலி செலுத்தினார்கள்.
 

Next Story

சாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பேரறிவாளன் (படங்கள்)

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான, சாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடலைக் காண நளினி, பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்