ddd

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, அமமுக தலைமையிலான கூட்டணி, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.

Advertisment

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் வேட்பாளர்களாக ஐந்து பேர் களத்தில் இருந்தனர். இதில் எடப்பாடி பழனிசாமியும், மு.க. ஸ்டாலினும்தான் அமோக வெற்றி பெற்றனர்.

திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் அப்போது ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை எடப்பாடி பழனிசாமி அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் சேலத்தில் இருந்தப்படியே தனது ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடித்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்.திமுகவரும் 7ஆம் தேதி திமுக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

அதிமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளதால் எதிர்க்கட்சி மாறியுள்ளதால் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதில் அக்கட்சியில் பெரும் விவாதம் நடந்து வருகிறது.