2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும். அந்த குழுதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறினார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடியையும் அவ்வப்போது சந்தித்து மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டு குழு அமைப்பதில் உறுதியாக இருந்தார்.
அதன்படி இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுக்குழு உறுப்பினர்களை அறிவித்தார்.
திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், கே.சி.பி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக அறிவித்தார்.