Skip to main content

இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு - 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றம்!

Published on 14/06/2018 | Edited on 14/06/2018


18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா, நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜீ தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக் கோரி கடந்த ஆண்டு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார்.

 

 

அவர்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கம் அளித்த நிலையில், மற்ற 18 எம்எல்ஏக்களை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் தனி நீதிபதி விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி 24ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்கியது.. அதில், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். ஆனால் நீதிபதி எம்.சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தெரிவித்தார்.

இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பையடுத்து, 3வது நீதிபதிக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும். தகுதிநீக்க வழக்கின் முடிவு வரும் வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் 3வது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரன்..! (படங்கள்)

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன், அவரது வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேளச்சேரி தொகுதியின் அமமுக  வேட்பாளர் சந்திர போஸை ஆதரித்து டி.டி.வி. தினகரன் வேளச்சேரி காந்தி சாலையில் பிரச்சாரம் செய்தார். 

 

 

Next Story

சசிகலா தமிழகம் வருகை... அமமுகவினர் உற்சாக வரவேற்பு!! (படங்கள்)

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவிலிருந்து தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுகிலும் 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்றனர்.

 

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார் சசிகலா. சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.