Skip to main content

சீனா எங்கே? இந்தியா எங்கே? தனிமைப்படுத்திய தந்திரம்!- பகுதி: #2

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

தோற்றுப்போன வெளியுறவுக் கொள்கை!

இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் சைனாவினுடைய ஆதிக்கம் என்ன? இந்தியாவுக்கு SAARC என்ற  ஒரு அமைப்பு இருந்தது. இந்த SAARC அமைப்புகளை  கடந்த 10-20  ஆண்டுகளில்.. இந்தியா தன் கைக்குள் வைத்திருந்தால்..  political sphere-ல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்லமுடியும்.  இந்தியாவால் இந்த SAARC அமைப்பே ஒரு முக்கியத்துவம் பெறாத  நிலைக்குத் தள்ளப்பட்டு, இன்று BIMSTEC என்ற அமைப்புக்குத் தாவிவிட்டார்கள். நமது பிரதமரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் சொல்கிறார்கள் SAARC அமைப்பு நமக்கு உகந்ததாக இல்லையென்று. ஏன் தெரியுமா? SAARC அமைப்பில் இருந்த அத்தனை நாடுகளும் இந்தியாவைச் சார்ந்துதான் இருந்தன. ஆனால்.. இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டிய அதே நேரத்தில், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் சைனாவோடும் கைகோர்த்து செயல்பட்டன. political sphere-லயும் SAARC அமைப்பிலுள்ள நாடுகளுடன் சேர்ந்து இருக்கக்கூடிய அளவில் இந்திய வெளியுறவுக் கொள்கை அமையவில்லை. தோல்வி அடைந்திருக்கிறது. 

 

chennai




தனிமைப்படுத்திய தந்திரம்! 

சைனா என்ன செய்தது? ஏற்கனவே வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது மட்டுமல்ல..  SAARC  அமைப்பிலுள்ள வளர்ந்துவரும் அத்தனை நாடுகளிலும் சைனாவுடைய projects.. infrastructure products, rail, airport infrastructure, shipping infrastructure, industrial infrastructure, oil infrastructure என அத்தனை infrastructures களிலும் சைனா முதலீடு செய்து அத்தனை நாடுகளையும் தன் பிடிக்குள் வைத்துக்கொண்டது. இத்தனை நாடுகளும் சைனாவுக்கு கப்பம் கட்டக்கூடிய நிலையில் இருக்கின்றன.  தொழில் சார்ந்த இந்தப் பொருளாதாரத்தை வைத்து SAARC நாடுகளை சைனா தனிமைப்படுத்திவிட்டது. 
 

இப்போது நடக்கிறதே பேச்சுவார்த்தை! இதில் இந்தியாவும் சைனாவும் equal power. எங்களை நீங்க disturb பண்ணாதீங்க. நீங்க அங்கேயே நின்னுக்கங்க. நாங்க இங்கே நின்னுக்கிறோம்னு பேசுவாங்களா? பேச முடியுமா? இந்தியாவிற்கு அந்த வாய்ப்பும் இல்லை. ஏனென்றால், SAARC-ஐ விட்டுவிட்டு, நான் இந்த ஆட்டைக்கு வரல.. எனக்கு இந்த ஆட்டை ஒத்துவராதுன்னு BIMSTEC அமைப்புக்குப் போய்விட்டது. இதன்மூலம் SAARC நாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இந்தியா இழந்தது. political sphere-லும் எல்லாம் போய்விட்டது. 
 


அதே பிரிட்டிஷ் ஸ்டைலில்!


சரி, Geo-political field-லும் சைனா இன்றைக்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா போய், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சைனா, ஏசியா மற்றும் ஏசியான் வரைக்கும் ONE BELT ONE ROAD என்னும் அருமையான ஒரு திட்டத்தின் மூலம் இந்த நாடுகளையெல்லாம் ‘கனெக்ட்’ பண்ணுது. இப்படி கடல் மார்க்கமாகவும், தரை வழியாகவும் சைனா இன்றைக்கு தனது பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு இலகுவாக்கி வைத்திருக்கிறது. எப்படி பிரிட்டிஷின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்கு கடல் வழியாக வந்து நம் நாட்டைப் பிடித்ததோ, அதற்கு தகுந்தாற்போல் பிரிட்டிஷ் முழு ராணுவமும் வந்து அவர்களின் வணிகத்திற்கு சப்போர்ட் பண்ணியதோ, எப்படி இந்தியாவை 400 ஆண்டுகாலம் அடிமைப்படுத்தினார்களோ, அதுபோல, நம்மைச் சுற்றியிருக்கும் நாடுகளை தற்போது Geo political sphere-லும் சைனா வெற்றி கண்டிருக்கிறது. இந்தியா அதனுடன் கைகோர்க்கவில்லை என்றாலும் சைனா பரவலாக்கி வருகிறது. சரி, இந்தியா என்ன பண்ணியிருக்கிறது? ஜியோ பொலிடிகலா என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?  நம்மிடம் இருந்த SAARC அமைப்பையே விட்டுவிட்டோமே!.  

 

china and india



 

போர் வராமல் காக்கும் சக்தி!

நம்ம கிட்ட இருக்கிற ஒரே டிரென்ட் ஆட்டம்-பாம்..  நியூக்ளியர் வெப்பன். அது ஒண்ணுதான் இந்தியாவுக்கும் சைனாவுக்கும் போர் வராம காத்துக்கிட்டு இருக்கு. சைனா இந்தியா மேல போர் தொடுக்கவே தொடுக்காது. ஏனென்றால், சைனாவுக்கு எகனாமிக் இன்ட்ரஸ்ட் தான். எகனாமிக் இன்ட்ரஸ்ட்டுக்கு இந்தியாகூட கை கொடுக்க வரும். நாம் வாங்கக் கூடிய நாடு. ஆனால், ஏந்தக் கூடிய நிலையில் இருக்கிறோம். நாம் ஏந்தித்தான் ஆகணும்.  வேற வழியில்லை. ஏனென்றால், இந்தியாவில் இருக்கக்கூடிய  infrastructures-ம் சரி..  தொழிற்சாலைகள் மற்றும் small scale, medium scale industries-ம் சரி,  ஒவ்வொன்றாகத்  திட்டம் போட்டு ஒழிக்கப்பட்டு வருகிறது. நீங்க எப்படி சைனாவோட manufacturing hub ஆக முடியும்?  


make in india அப்படின்னீங்க. made in india- வில் பண்ணுன light combat aircraft-ஐயே make in india-வில் பண்ண முடியலியே? நீங்க இப்ப ரபேல் விமானம்ல வாங்கிட்டு இருக்கீங்க.  இங்கே உற்பத்தி பண்ணக்கூடிய கூடிய,  இங்கே டிசைன் பண்ணக்கூடிய சுய indigenous development-க்கு இந்தியா எந்த அளவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்திருக்கிறதென்று  பார்த்தால்.. ஜீரோ.  பிறகு நாம்  எப்படி அவர்களுடன்  trade deficit குறித்து  உட்கார்ந்து பேச முடியும்? சைனாவுடன் தலை நிமிர்ந்து கை கொடுக்கக்கூடிய பொருளாதார பலத்தை நாம் உருவாக்கியிருந்தால், கண்டிப்பாக இன்றைக்கு  சரிசமமாக கை கொடுத்திருக்க முடியும். ஆனால், இந்தியாவின் வளமும், நீர்வளம், நிலவளம், மனிதவளம் என இத்தனை வளமும்  சைனாவுக்கு ஒன்றில்கூட குறைந்தது கிடையாது. இன்றைக்கு 5- ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்கான பேச்சு வார்த்தை நடந்திருக்கலாம்.
 

முந்தைய பகுதி: 

சீனா எங்கே? இந்தியா எங்கே? சந்தித்த வேளையில் சிந்தித்தாரா மோடி?- பகுதி: 1.