Skip to main content

IND vs AFG : தொடரை வென்ற இந்திய அணி

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Indian team won the series

இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 வது டி20 போட்டி இன்று (14.01.2024) இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே ‘டக்’ அவுட் ஆகி இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா  ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இருப்பினும் இந்திய அணி 15.4 ஓவர்களில்  4 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம்  6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. சிறப்பாக பந்து வீசிய அக்சர் பட்டேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.