Skip to main content

பிரிந்துசென்ற மனைவி; கணவர் எடுத்த விபரீத முடிவு!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Husband lost their life Because of his wife  separation

ஈரோடு சூரம்பட்டி வலசு, சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (31). அவரது மனைவி ஜோதிகா. இவர்களுக்கு ஒரு மகனும் . ஒரு மகளும் உள்ளனர். மணிகண்டன் ஈரோடு பெரியார் நகரில் உள்ள நகை கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி கார்மெண்ட்ஸ்சில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

இதனிடையே மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 8-ந் தேதி குடித்து விட்டு வீட்டுக்கு வந்த மணிகண்டன் மனைவியை அடித்துள்ளார். வலி தாங்க முடியாமல் தனது குழந்தைகளுடன் ஜோதிகா வீட்டை விட்டு வெளியேறி தர்மபுரியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். 

இந்நிலையில் மணிகண்டன் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டை பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மணிகண்டன் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இது குறித்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மணிகண்டன் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்