Skip to main content

'அதிகாரிகள் சரியாக வேலை செய்வதில்லை'-எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
'Officials are not working properly'-SP Velumani alleges


கோவையில் கடுமையான உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ''கோவை மாவட்டத்தில் அவினாசி தொகுதியில் அன்னூர் பிளாக் வருகிறது. பொள்ளாச்சி தொகுதி, வால்பாறை தொகுதி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சூலூர், கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் இப்படி முழுமையாக 12 தொகுதிக்கு கடுமையான குடிநீர் பிரச்சினை இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது அதிகமான கூட்டுக் குடிநீர் திட்டங்களைக் கொடுத்தோம். கோவையில் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதனை சரியாக வேகமாக முடித்து இருந்தால் கண்டிப்பாக இன்று இந்தப் பிரச்சனை இருந்திருக்காது. முழுமையாக விவசாயிகளை வைத்து மண்ணெடுக்கப்பட்டது. குளங்கள் தூர்வாரப்பட்டது. டேமில் மண்ணெடுத்து ஸ்டோரேஜ் அதிகம் செய்தோம். நீர் மேலாண்மை திட்டம் அதிகமாக செயல்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது யாருமே இந்தத் திட்டங்களைக் கண்டு கொள்வதில்லை. வாரம் வாரம் விவசாயிகளின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு பேசுவதோடு சரி எந்த முக்கியத்துவம் இல்லை. கோயம்புத்தூரில் பில்லூர் அணை, சிறுவாணி அணை, ஆழியாறு அணை இந்த மூன்றும் தான் முக்கியமான குடிநீர் ஆதாரம். இந்த அணை எல்லாம் தூர்வாரி இருக்க வேண்டும். ஆனால் இன்று எதுவுமே இல்லை. நகராட்சி, மாநகராட்சி என எந்த அதிகாரிகளுமே சரியாக வேலை செய்வதில்லை''என்றார்.

சார்ந்த செய்திகள்