Skip to main content

அயலக தமிழர்கள் கவனத்திற்கு; தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
Important Notification issued by Tamil Nadu Govt on Neighboring Tamils invited to register

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணையலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வேலைவாய்ப்பு. கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாரியம் மூலம் அயலகத்தில் உள்ள தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

18 முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் வலைத்தளத்தில் (https://nrtamils.tn.gov.in) ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.200/- செலுத்தி கீழ்க்கண்ட இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெறலாம். இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். இந்திய கடவுச்சீட்டு மற்றும் தகுந்த ஆவணங்களுடன் அயல்நாடுகளில் பணிபுரியும் / கல்வி பயிலும் தமிழர்கள் மற்றும் Emigration Clearance பெறப்பட்டு அயல்நாடு செல்ல உள்ள தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் (தமிழ்நாட்டிற்கு வெளியே) ஆறு மாதங்களுக்கு மேல் வசிக்கும் தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதியுடையவர்கள் ஆவார்கள். உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் விதமாக 15.05.2024 முதல் 15.08.2024 வரையிலான மூன்று மாதங்களில் பதிவு செய்யும் நபர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.200/- செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு பெற்ற நபர்கள், வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களிலும் பயன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில் அவர்களின் குடும்பத்திலுள்ள மகன் / மகளுக்கு (அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு) அவர்களின் கல்வி நிலைக்கேற்ப கல்வி உதவித் தொகை வழங்கப்படும்:

இத்திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில் அவர்களின் குடும்பத்திலுள்ள திருமண வயது பூர்த்தியடைந்த மகன் / மகளுக்கு (அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு) திருமண உதவித்தொகையாக ரூ.20,000 வழங்கப்படும். பழங்குடியின பிரிவினர் குறைந்த பட்சம் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பிற பிரிவினர் குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்