Add1
logo
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி || ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு! || திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு || தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல் || காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்! || முன் நிபந்தனைகள் இன்றி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை? - அமெரிக்கா அறிவிப்பு || கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா! || ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு! || வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி! || சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி || முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள் || மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தோனி ‘லைக்’ செய்த ட்வீட்டால் சர்ச்சை! || ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ||
Logo
பொது அறிவு உலகம்
பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயமும் கட்டுபாடும்! -எஸ். விஸ்வநாதன்
 ................................................................
தமிழ்ச் சமூக வரலாறு - ஆ சிவசுப்பிரமணியன்
 ................................................................
01-03-12            ரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் உள்கட்டமைப்பு அபிவிருத்தியிலும், மனிதவள மேம்பாட்டி லும் அந்நாடு கொண்டுள்ள எண்ணெய் வளம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நாட்டுக்கு தேவைப்படும் மின் உற்பத்தி, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், கனரக தொழிற்சாலைகள், போக்குவரத்து போன்ற முக்கியமான துறைகள் இயங்குவதற்கு எரிபொருள் முக்கியமான ஒன்று. உலகிலேயே எண்ணெய் வளம் மிகுந்த வளைகுடா நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி அவற்றின் எண்ணெய் வளத்தினாலேயே என்பது நிதர்சனமான உண்மை.

""திரவத்தங்கம்'' என்றழைக்கப்படும் கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், கெரசின், LPG, நாப்தா, LSHS, F.O (Fuel oil), கெரசின், போன்ற எரிபொருட்களும், பென்சீன், டொலுவீன் போன்ற அரோமேடிக் வேதிப்பொருட்களும், ஸ்பிரிட்டுகளும் (சிறப்பு கொதிநிலைகளை கொண்டவை), பிடுமின் (தார்) போன்ற பயன்பாட்டு பொருட்களும் கிடைக்கின்றன. இவையனைத்தும் சுத்திகரிப்பு நிறுவனங்களில் (Refineries) சுத்திகரிக்கப்பட்டு, எண்ணெய் வணிக நிறுவனங்களால் (IOCL, BPCL, HPCL)  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போது 20 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் IOCL, BPCL, HPCL, ONGC  போன்ற பொதுத்துறை நிறுவனங்களும், ரிலையன்ஸ், எஸ்ஸார் ஆயில் போன்ற தனியார் துறை நிறுவனங்களும் அடங்கும்.

பெட்ரோலிய பொருட்களின் தேவை ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிபோடும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்தது. அதனால் கச்சா எண்ணெய் வளம் ஒரு நாட்டின் நவீன பொருளாதாரத்தின் ஆணிவேர் என்றே கூறலாம். இத்தகைய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கச்சா எண்ணெய் (Crude oil)  இந்தியாவில் பாம்பே ஹை (Bombay High), அசாம் மாநிலம் (திக்பாய்), குஜராத், ஆந்திரா (K-G basin) ஆகிய இடங்களில் கிடைக்கிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ONGC மற்றும் OIL (OIL INDIA LIMITED) போன்றவையும், ரிலையன்ஸ் மற்றும் CAIRNS INDIA (P) LTDஆகிய தனியார் துறை நிறுவனங்களும் உற்பத்தி செய்கின்றன.
உலகின் கச்சா எண்ணெய் வளம்
- ஒரு பார்வை
உலகில் கச்சா எண்ணெய் வளம் கொண்டிருக்கும் பகுதிகளை மத்திய கிழக்கு நாடுகள், மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் நாடுகள் என பிரிக்கலாம். இவற்றில் அதிக அளவு கச்சா எண்ணெய் வளத்தினை கொண்டிருப்பது மத்திய கிழக்கு நாடுகளே யாகும். வளைகுடா நாடுகளான ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, கத்தார், பக்ரைன், அபுதாபி, யெமன், துபாய், U.A.E  போன்றவை இவற்றில் அடங்கும். இந்த மத்திய கிழக்கு நாடுகள் சுமார் 727 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வளத்தினை கொண்டுள்ளது. அதனால்தான் அமெரிக்கா எப்போதும் வளைகுடா நாடு களின் மீது ஆதிக்கம் செலுத்துவதில் நாட்டம் கொண்டிருக்கிறது. மத்திய மற்றும் தென் அமெரிக்கா 99 பில்லியன் பீப்பாயும், ஆப்பிரிக்கா 87 பில்லியன் பீப்பாயும், ரஷ்யா 78 பில்லியன் பீப்பாயும், மேற்கு ஐரோப்பா மற்றும் சீனா 18 பில்லியன் பீப்பாயும், மெக்சிகோ 16 பில்லியன் பீப்பாயும், இந்தியா சுமார் 5 பில்லியன் பீப்பாயும் கச்சா எண்ணெய் வளத்தினை கொண்டுள்ளன. கச்சா எண்ணெய் உள்ள கந்தக (Sulphur)அளவினைப் பொருத்து அதன் தரம் மாறு படுகிறது. குறைந்த அளவு கந்தகம் கொண்டவை உயர் தரமாகவும், அதிக அளவு கந்தகம் கொண்டவை            குறைந்த தரமாகவும் கருதப்படுகிறது. தரத்தினைப் பொருத்து அதன் விலையும் மாறுபடுகிறது. அவ்வகையில் 0.4% எடையில் கந்தகத்தினை கொண்டுள்ள பிரெண்ட் குரூட் (பிரிட்டன்) உயர்தரமாக கருதப்படுகிறது. இதன் விலையினைக்கொண்டே கச்சா எண்ணெயின் விலை அறியப்படுகிறது. வளைகுடா நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் சில வகை கச்சா எண்ணெய்கள் அதிக கந்தக அளவு கொண்டவை.

அரபு நாடுகளான ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரேபியா, U.A.E ஆகிய நாடுகளும், அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடார், லிபியா, நைஜீரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இணைந்து  OPEC (0rganisation of the Petroleum Exporting Countries)  என்ற அமைப்பு 45 நாட்களுக்கொருமுறை கூடி தாங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கின்றது.

அமெரிக்காவும் அதன் எண்ணெய் தாகமும்

இன்று உலக நாடுகளிடையே, தன் எண்ணெய் வளத்தில் கைவைக்காமல் அடுத்த நாட்டிலுள்ள எண்ணெய் வளத்தில் தன்னுடைய கழுகுப் பார்வையை பாய்ச்சுவது அமெரிக்காவே. இதன் முக்கிய காரணம்  அமெரிக்கா உலகிலுள்ள மொத்த கச்சா எண்ணெய் வளத்தில் 3 சதவீதமே கொண்டுள்ளது. ஆனால் அதன் தேவையோ மொத்த உலகத் தேவையில் 31 சதவீதம். அதனால் தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஆதிக்க வழியில் இறங்குகிறது. முப்பது வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் தேவையில் 28% மட்டுமே இறக்குமதி செய்துவந்த அந்நாடு, இன்று 60% அளவு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதற்காக அரசியல் குழப்பம் நிறைந்த நாடுகளில் மூக்கை நுழைத்து தனக்கு சாதகமான அரசியல் சூழலை ஏற்படுத்திக் கொள்கிறது. மேலும் வேதியல் ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதாகக் கூறியும் போர் தொடுக்கிறது. இதன் சமீபத்திய உதாரணங்கள் ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் நிகழ்ந்த அமெரிக்க தாக்குதல்கள்.


தற்போது ஈரான் மீது போர் தொடுக்க முனைந்துள்ள அமெரிக்கா, ஒவ்வொரு நாளும் ஆக்க வழியில் அணு சக்தியை பயன்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உள்ளது என்பதனை சுலபமாக மறந்து விடுகிறது.


அமெரிக்கா சுமார் 200 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை கனடாவிலிருந்தும், 160 மில்லியன் பீப்பாய் சவுதி அரேபியாவிலிருந்தும் 160 மில்லியன் பீப்பாய் மெக்சிகோவிலிருந்தும் இறக்குமதி செய்து வருகிறது. இதுமட்டுமன்றி வெனிசுலா, நைஜீரியா, ஈராக், பிரிட்டன், நார்வே, அங்கோலா, அல்ஜீரியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்து தனது எண்ணெய் தாகத்தை தணித்துக் கொள்கிறது. அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் வளத்தை முழுமையாக உபயோகப்படுத்தாமலிருப்பது எதிர்கால எண்ணெய் தேவையினை கருதியே என்பது உலகறிந்த உண்மை.

எண்ணெய் வளத்தில் இந்தியாவின் நிலை


உலகத்தின் மொத்த கச்சா எண்ணெய் வளத்தில் சுமார் 0.7 சதவீத அளவினையே இந்தியா கொண்டுள்ளது. ஆனால் நமது தேவையானது மொத்த உலகத்தேவையில் 4 சதவீதமாக இருப்பதுடன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆசியாவிலேயே பெட்ரோலிய எரிபொருள் தேவையில் இந்தியாவானது ஜப்பான்,                   சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக நான்காம் நிலையில் உள்ளது. பெருகிவரும் தொழில் நிறுவனங்கள், வேளாண்மை எந்திரமயமாதல், மின்சாரத் தேவை, நகரமயமாதல், தனியார் வாகனங் களின் பெருக்கம் ஆகியவை இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்களின் தேவையை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 2009-10 காலகட்டத்தில் இந்தியாவின் எரிசக்தி தேவையை நிலக்கரி (53%) பெட்ரோலிய எரிபொருட்கள் (33%) இயற்கை எரிவாயு (9%) அணுசக்தி (1%) நீர்சக்தி (2.6%) ஆகியவற்றின் வாயிலாக எதிர்கொண்டோம். இதில் பெட்ரோலிய எரி பொருட்களின் தேவை எதிர்காலத்திலும் எந்தவித குறைவும் இன்றி அதிகரித்து கொண்டே வரும்.

2009-10 காலகட்டத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் பயன்பாடு 186.6 மில்லியன் மெட்ரிக் டன்னாக (MMT)  இருந்தது. அடுத்த ஒரு வருடத்திலேயே (2010-11) இது 5.3 சதவீதமாக உயர்ந்து 196.5 MMT ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டிலிருந்து உற்பத்தி செய்யப் படும் கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படும் பெட்ரோலியப் பொருட்களின் அளவு 41.89 MMT ஆனால் தேவை சுமார் 148 MMT. சுமார் 107 MMT பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்ய தேவையான கச்சா எண்ணெய் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று.
இந்தியாவின் எதிர்கால ஆற்றல் தேவையினை கணக்கில் கொண்டால், இந்தியா எண்ணெய் வளம் கண்டுபிடிப்பில் இன்னும் அதிக முன்னேற்றம் பெற வேண்டியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே ONGC, BPCL, IOCL போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் வெளிநாடுகளில் (பிரேசில், மொசாம்பிக், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிரிட்டன்) எண்ணெய் கண்டுபிடிப்பில் இறங்கியுள்ளன.

பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம்

பெட்ரோலியப் பொருட்களில் பொதுமக்கள் பயன் படுத்தும் பெட்ரோல், டீசல், கெரசின், LPG ஆகியவையே முக்கியமாக விலை நிர்ணயிக்கப்பட வேண்டியவையாக இருந்து வருகிறது. 1920-ஆம் ஆண்டுகளில் பல்வேறு தனியார் விற்பனை நிறுவனங்கள் குறிப்பாக கெரசினை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தன. அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கமோ (அ) வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களோ இந்தியாவில் விற்கப்படும் கெரசினின் விலையை கட்டுப்படுத்தவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் தங்களுக்கு கட்டுபடியாகும் விலையில் விற்பனை செய்து வந்தனர். இந்த நிலை இரண்டாம் உலகப்போûர் வரை தொடர்ந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு எண்ணெய் நிறுவனங்கள் முக்கியமான பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய துவங்கின.

இந்தியாவில் முதன் முதலில் 1948-ஆம் ஆண்டு பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கட்டுப் படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்திற்கும் பர்மா ஷெல் (Burmah Shell) எண்ணெய் நிறுவனத்திற்குமிடையே ஒரு ஒப்பந்தமிடப்பட்டது. இதன்படி  பெட்ரோலியப் பொருட் களின் விலையை இறக்குமதி விலைக்கு சமான விலையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டது. இம்முறை Valued Stock Account (VSA) எனப்படும். இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மதிப்புடன் காப்பீடு, சுங்கவரி, வட்டி, பயணச் செலவு சேர்த்து பெட்ரோலியப் பொருட்களின் விலை தீர்மானிக்கப்பட்டது. பர்மா ஷெல் அன்றைய இந்திய எண்ணெய் சந்தையில் முக்கிய விற்பனை நிறுவனமாக விளங்கியதால் அது நிர்ணயிக்கும் விலையினை மற்ற நிறுவனங்களும் பின் தொடர்ந்தது. வருட இறுதியில் அரசு லாப நஷ்ட கணக்கு களை தணிக்கை செய்து விற்பனை விலையை கூட்டவோ குறைக்கவோ செய்தது.

1958-ஆம் ஆண்டு VSA முறையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிர்ணயம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. இதன் காரணம் ஊகங்களின் அடிப் படையில் ஒவ்வொரு வருடமும் பெட்ரோலியப் பொருட் களின் விலையை நிர்ணயிக்காமல் உண்மையான விலையுடன் குறைந்த அளவு லாபம் சேர்த்து கணக்கிடலாம் என்ற வாதம் எழுந்ததினாலேயே. முதன் முதலில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முறையான அணுகுமுறையை 1961-இல் டால்மே (Dalme) கமிட்டி மொழிந்தது.

அதன் பின்னர் வந்த டலுக்தர் (Talukdar)  கமிட்டியும் இறக்குமதி சமான விலையின் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்ய பரிந்துரைத்தது. 1969-இல் சாந்திலால் ஷா கமிட்டி இறக்குமதி சமான விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பது சரியல்ல என்று கூறியது. அப்போது உள்நாட்டிலேயே பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி துவங்கியிருந்தது. எனவே உள்நாட்டு உற்பத்திக்கும் இறக்குமதி விலையின் அடிப்படையில் விலை நிர்ணயிப்பது முறையாகாது என்று கூறியது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அந்நிய நாடுகளுடன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான ஒப்பந்தமிட்டிருந்ததால் வேறு வழியின்றி இம்முறையே தொடர்ந்தது.

அட்மினஸ்டெர்டு பிரைஸ் மெகானிசம்
- APM (1970-2001)

1970-ஆம் ஆண்டு APM என்னும் இந்த வழிமுறை இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கங்களை (அ) பாதிப்பு களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதுதான். உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வரும் மாற்றங் களால் ஏற்படும் அதிக நிதிசுமையினை சமாளிப்பதற்கு ஆயில் பூல் அக்கௌண்ட் (OIL POOL ACCOUNT) என்னும் கணக்கினையும் துவங்கியது மத்திய அரசு. பொதுமக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலியப் பொருட்களின் மீது சுமத்தப்படும் சுங்கவரி, வணிகவரி, விற்பனை வரி ஆகிய வரிகளினின்று கிடைக்கும் நிதி இந்த எண்ணெய் கணக்கில் சேர்க்கப் பட்டது. இந்த கணக்கிலிருந்துதான் எண்ணெய்  நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், LPG, ஆகியவற்றை தள்ளுபடி விலை (அ) சலுகை விலை (Subsidy) யில் விற்பதனால் ஏற்படும் இழப்பீட்டு தொகையினை மத்திய அரசு வழங்கி வந்தது. 1990 வரை இந்த எண்ணெய் கணக்கு நல்ல முறையில் இருந்தது. கணக்கில் நிதியும் இருந்து வந்தது. 1991-ஆம் ஆண்டுக்கு பிறகு, தாராளமயம் எண்ணெய் கணக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. எண்ணெய் கணக்கு நிதி பற்றாக்குறை கணக்காக தடுமாறத் துவங்கியது. பல ஆயிரம் கோடிகள் நஷ்ட கணக்காக உருவானது. அத்தகைய சூழலில் கூட பொதுமக்களின் அதிகமான பயன்பாடே இத்தகைய இழப்பீட்டுக்கு காரணம் என்று பழியை மக்கள் மீதே சுமத்திவிட்டு கோர முகங்களை மறைத்துக் கொண்டனர். அரசியல்வாதிகள், நிதி பற்றாக்குறையை சரிசெய்ய பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது மத்திய அரசு. எண்ணெய் கணக்கை சரிகட்ட வேண்டி உலக கச்சா எண்ணெய் சந்தையில் அதன் விலை வீழ்ச்சியடைந்த போதும் கூட பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க முன்வரவில்லை மத்திய அரசு.

இறக்குமதி விலைக்கு சமான விலை (Import Parity Price)

2001-ஆம் ஆண்டு வாஜ்பேயி தலைமையிலான NDA அரசு APM முறையை தூக்கியெறிந்துவிட்டு, உலக சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை அடிப்படையாகக் கொண்டு நம் உள்நாட்டில் விற்கப்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை தீர்மானிக்கும் புதிய முறையைக் கொண்டு வந்தது. இதற்கு IPP என்று பெயர். அதாவது வெளிநாடுகளிலிருந்து ஒரு லிட்டர் டீசலை நமது இந்திய துறைமுகங்களில் இறக்குமதி செய்யும்போது எவ்வளவு விலை கொடுக்கின்றோமோ  அந்த விலையுடன் இந்திய அரசாங்கம் நம் மீது சுமத்தும் வரிச்சுமைகள் மற்றும் அதனை பாதுகாப்பாக கொண்டு சென்று மக்களிடம் விற்பனை செய்ய ஆகும் போக்கு வரத்து செலவு, டீலர் கமிஷன் ஆகியவை சேர்த்து ஒரு லிட்டர் டீசல் விலை எவ்வளவு என்று மத்திய அரசு தீர்மானித்து வந்தது. இந்த முறை அமலுக்கு வந்தவுடன் எண்ணெய் கணக்கு (OIL POOL ACCOUNT) என்பது காணாமல் போனது. இன்னும் சரியாகக் கூறினால் எண்ணெய் கணக்கு பொது பட்ஜெட்டில் கரைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல், கெரசின், LPG ஆகியவை சலுகை விலையில் விற்கப்படுவதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு வரும் லாபக்குறைவு (அ) இழப்புக்கு எண்ணெய் பத்திரங்கள் (Oil bonds) கொடுக்கப்பட்டது. இந்த எண்ணெய் பத்திரங்களை காசாக மாற்ற வேண்டு மானால் 5 வருடம் காத்திருக்க வேண்டும். அதுவரை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் (REFINERIES) இயங்குவதற்கு தேவையான கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தடுமாறின. எப்போதெல்லாம் எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறதோ            அப்போதெல்லாம் எண்ணெய் பத்திரங்களை கொடுத்து மத்திய அரசு தப்பித்து கொள்ளும். இந்த எண்ணெய் பத்திரங்களை வங்கிகளிடமோ நிதி நிறுவனங்களிடமோ பத்திரத்தினை அடகுவைத்து முழு மதிப்பிற்கும் குறைவான தொகையினை பெற்றுக்கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் இயங்கி வந்தன. APM முறை இருந்தபோது தங்களுடைய லாபக்குறைவுக்கு தகுந்தவாறு கச்சா எண்ணெயை பெற்றுவந்த நிலை மாறி நிதி நிறுவனங் களிடம் கடன் பெற வேண்டிய சூழல் வந்தடைந்தது.

இறக்குமதி விலைக்கு சமான விலை முறை கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது மட்டும் பயன் படுத்தப்பட்டது. பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்யும்போது உபயோகப்படுத்தப்படவில்லை. கச்சா எண்ணெயினுடைய இறக்குமதி சமான விலை பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி சமான விலையைவிட குறைவு. அன்றைய அரசு இத்தகைய  ஏற்றத்தாழ்வுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.வணிக சமான விலை


2006-இல் உலகச்சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரத்துவங்கியதனால் இறக்குமதி விலைக்கு சமான விலை முறை எந்தவிதத்திலும் உதவவில்லை. கச்சா எண்ணெயின் விலை 120 டாலரைத் தொட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலமைந்த அரசு சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவினை அமைத்தது. அக்குழு வணிக சமான முறை என்ற புதிய உத்தியை பரிந்துரைத்தது. இதன்படி பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயிப்பதில் ஏற்றுமதி சமான விலையும் இடம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியது எனவே 80% இறக்குமதி மற்றும் 20% ஏற்றுமதி சமான விலைகளைக் கொண்டு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டது. பெட்ரோலியப் பொருட்களின் வரிச்சுமை குறைக்கப் படாததால் இம்முறையும் பழைய நிலை தொடரவே வழிவகுத்தது.


மேலும் இந்த குழு வணிக சமான முறையில் எண்ணெய் நிறுவனங்களை பெட்ரோலிய பொருட்களின் விலையை தீர்மானிக்க வழிவகை செய்தது. மூன்று எண்ணெய் நிறுவனங்களின் (IOCL, BPCL, HPCL) உயர் அதிகாரிகள் இருவாரங்களுக்கு ஒருமுறை கூடி பெட்ரோலிய பொருட்களின் (பெட்ரோல்) விலையை நிர்ணயிக்க அனுமதியளிக்கப்பட்டது. அது மட்டுமன்றி மேல்தட்டு மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பெட்ரோல் விலையை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தளர்த்துவது எனவும், அடித்தட்டு மக்களின் அத்தியாவசியப் பொருளான கெரசின் (மண்ணெண்ணெய்), LPG போன்றவற்றிற்கு சலுகை விலை அனுமதிப்பதென்றும், மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான டீசலுக்கும் சலுகை தொடருவது என முடிவெடுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
டீசல் விலை நிர்ணயிக்கும் முறை

1. BS-IIIக்கு சமமான டீசலின் விலை (அரபு நாட்டில்) - 130.24 டாலர்/பீப்பாய்

2. இந்திய துறைமுகத்திற்கு கொண்டு வர ஆகும் போக்குவரத்து (கப்பல்) செலவு - 1.58 டாலர்/பீப்பாய்

மொத்த செலவு - 131.82 டாலர்/பீப்பாய்

இதனை ரூபாயில் மாற்றினால் - ரூ.42.18
(1 டாலர்= ரூ.48.46, 1 பீப்பாய்= 159 லிட்டர்)
3. இறக்குமதி செலவு (காப்பீடு/கடல் இழப்பு/           துறைமுக வரி) - 0.39 ரூ/லிட்டர்
4. வணிக வரி அ 2.58% (2.5%+3 கல்வி செஸ்) - 1.10 ரூ/லிட்டர்
5. இறக்குமதி சமான விலை (29.50 ஈலில் )
(3+4+5) லி 43.68 ரூ/லிட்டர்
6. ஏற்றுமதி சமான விலை (29.50 ஈலில்)                                        - 41.68 ரூ/லிட்டர்
7. வணிக சமான விலை (80% (6) + 20% (7)) - 43.28 ரூ/லிட்டர்
8. எண்ணெய் வணிக நிறுவனங் களால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும்     விலை -  43.28 ரூ/லிட்டர்
9. உள்நாட்டு போக்குவரத்து செலவு- 0.73                 ரூ/ லிட்டர்
10. எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் விற்பனை செய்ய ஆகும் செலவு - 0.65 ரூ/லிட்டர்
11. எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் லாபத் தொகை  - 0.80 ரூ/லிட்டர்
மொத்த விலை  - 45.50 ரூ/லிட்டர்
12. எண்ணெய் வணிக நிறுவனங்களின் லாபக்குறைவு      - 12.03 ரூ/லிட்டர்
13. சேமிப்பு கிடங்கு விலை - 33.47 ரூ/லிட்டர்
14. சுங்க வரி அ 2.06 ரூ/லி (2 ரூ/லி +3% கல்வி வரி)  - 2.06 ரூ/லிட்டர்
15. டீலர் கமிஷன் - 0.91 ரூ/லிட்டர்
16. மதிப்பு கூட்டுவரி  (டெல்லி அ 12.5%)                  - 4.46 ரூ/லிட்டர்
17. டீசலின் விற்பனை விலை (டெல்லி)                    - 40.91 ரூ/லிட்டர்
இவ்வாறு டீசல், கடஏ, கெரசின் ஆகியவற்றின் விலை கணக்கிடப்படுகிறது. LPG -க்கு 286.88 ரூபாயும், கெரசினுக்கு 28.55 ரூபாயும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதில் மூன்றில் ஒருபங்கு மத்திய அரசு வகிக்கிறது. பாக்கி இரு பங்குதொகை கச்சா எண்ணெய் கம்பெனி (ONGC) களும், எண்ணெய் வணிக நிறுவனங்களும் (IOCL, HPCL)  வகிக்கின்றன. தற்போது மத்திய அரசு அளிக்கும் சலுகை விலை வசதி படைத்தவர்களுக்கு அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் இச் சலுகையினை வசதி படைத்தவர்களும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கின்றனர். இதனை நிறுத்தாமல் தாமாக முன்வந்து இச்சலுகையினை கைவிட வேண்டுமென மன்றாடத் துவங்கியிருக்கிறது மத்திய  அரசு. சலுகையினத்தில் மட்டும் சுமார் 1,20,000 கோடிகள் சுமையாக மாறிக்கொண்டிருக்கின்றது.

மேலும் சுற்றுப்புறச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் கந்தகம், காரீயம் போன்ற நச்சுப் பொருட்களை பெட்ரோல், டீசல் ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்க புதிய தொழில்நுட்பங்களை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கையாள வேண்டியிருக்கிறது. இதற்காக தேவைப்படும் இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாய நிலையில் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன. மேலும் உலகத் தரத்திலான பெட்ரோல் டீசல் (Euro-III, Euro-IV) உற்பத்தி செய்ய இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. 2017-இல் தற்போதைய எண்ணெய் சுத்திகரிப்பு திறனான 196 MMTயிலிருந்து 235 MMT ஆக மாற வேண்டி யிருக்கிறது. இதற்காக புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை அமைக்க வேண்டிய நிலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன. எனவே பெட்ரோலியப் பொருட்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிய விரிவாக்க பணிகள் நடத்த அதிக நிதி தேவைப்படுகிறது.

பெட்ரோலின் விலைக்கட்டுப்பாட்டை தளர்த்தியாகி விட்டது. இன்னும் டீசல்,  LPG, கெரசின் போன்றவற்றின் விலை கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது. டீசலின் விலையை பகுதி - கட்டுப்பாடு தளர்த்துவதற்கான ஆலோசனைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.  LPG -யினை ஏழை எளிய மக்களுக்கு மட்டும் சலுகை விலையில் கொடுக்கும் எண்ணம் தீவிரமடைந்து வருகிறது. இந்த கட்டுப்பாடு தளர்த்தலும் ஒரு எல்லைக் குட்பட்டதாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் தனியார் எண்ணெய் நிறுவனங்கள்  கடஏ, டீசல், கெரசின் போன்றவற்றை விற்பனை செய்வதனால் (சலுகை விலையில்) ஏற்படும் லாப இழப்பீட்டினை அந்த நிறுவனங்களே ஏற்க வேண்டுமேயன்றி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுப்பது போன்று லாப இழப்பு தொகையை மத்திய அரசு தர இயலாது என்ற விதி இருப்பதனால் ரிலையன்ஸ் போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய சந்தையில் காலூன்ற முடியாமல் போனது. பெட்ரோலியப் பொருட்கள் அனைத்திற்கும் கட்டுப்பாட்டை தளர்த்திவிட்டால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மக்களின்    அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். மக்கள் பெரும் அவதிக்குள்ளாவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. அதே சமயம் எதிர்கால எரிசக்தி தேவையினை கருத்தில் கொண்டு எண்ணெய் வளங்களை பாதுகாக்காவிடில் இந்தியாவின் முன்னேற்றம் நிலைத்துபோகும். மனிதனின் அனைத்து தேவைகளும் இயற்கையினை சார்ந்திருப்பதால் ஒவ்வொரு எரிபொருள் சேமிப்பும் மிகவும் மதிப்புமிக்கவை.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(8)
Name : sir joel williams Date & Time : 2/14/2016 11:13:17 AM
-----------------------------------------------------------------------------------------------------
நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவை? * உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற * கடனை திருப்பி செலுத்தும் நீங்கள் பணம் கிடைக்கும் எட்டு நாட்களுக்குப் பிறகு தொடங்குகிறது வங்கி கணக்கு 2% * குறைந்த வட்டி விகிதம் * நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம் * நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம் *. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும் அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி நீங்கள் இருந்து. அங்கீகரிக்கப்பட்ட இந்த நியாயமான மற்றும் உரிமம் நிறுவனம், தொடர்பு எல்லோரும் நிதி உதவி கொடுக்க மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்ப படிவம் க்கான மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com சிறந்த அன்புடன் சர் ஜோயல் வில்லியம்ஸ் பண கடன் FIRM நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி தொலைபேசி: +60183723787
-----------------------------------------------------------------------------------------------------
Name : DEVARAJ Date & Time : 5/13/2012 8:02:15 PM
-----------------------------------------------------------------------------------------------------
வெரி குட நியூஸ் , போட்டி தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . நன்றி
-----------------------------------------------------------------------------------------------------
Name : Pa.Si. Ramachandran, Sr.Journalistt Date & Time : 4/1/2012 11:15:09 AM
-----------------------------------------------------------------------------------------------------
திரு விஸ்வநாதனின் கட்டுரை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. பல நல்ல தகவல்கள் இருக்கின்றன. ஆனாலும் மாநில அரசுகள் தங்கள் விற்பனை வரியை மிகவும் குறைத்துக் கொள்ளவேண்டும். நானோ கார் போன்றவை ஏழைகளின் கனவு. ஒரு லட்ச ரூபாய்க்கு கார் வங்கி வருடத்திற்கு பெட்ரோலுக்காக 40000 செலவழித்தால் என்ன பிரயோசனம்? இந்திய விஞ்ஞானிகள் இனி மின்சார காரை கண்டு பிடித்தால்தான் வாகனம் வைத்திருப்பவர்கள் வாழ முடியும்
-----------------------------------------------------------------------------------------------------
Name : Kannai.t.moorthy Date & Time : 3/30/2012 12:59:17 PM
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த தகவல் நன்றிகள் பல ...,
-----------------------------------------------------------------------------------------------------
Name : moorthy Date & Time : 3/28/2012 3:00:12 PM
-----------------------------------------------------------------------------------------------------
வெரி குட் நியூஸ் thanks
-----------------------------------------------------------------------------------------------------
Name : sriram Date & Time : 3/26/2012 8:11:46 AM
-----------------------------------------------------------------------------------------------------
மிக அருமை .
-----------------------------------------------------------------------------------------------------
Name : kulandhaisamy Date & Time : 3/16/2012 4:17:34 PM
-----------------------------------------------------------------------------------------------------
நம் நாட்டை பொறுத்தவரை மின்சக்திக்கும் பெற்றோலிய சக்திக்கும் மாற்றாக சூரிய சக்தியை பயன்படுத்தும் வழிகளை ஆராய்ந்து அமுல் படுத்த வேண்டும். அது ஒன்றுதான் நிரந்தர தீர்வு.
-----------------------------------------------------------------------------------------------------
Name : ramakannana Date & Time : 3/14/2012 3:27:19 PM
-----------------------------------------------------------------------------------------------------
சூப்பர் குட் மோரிங்
-----------------------------------------------------------------------------------------------------