Skip to main content

விதியை உடைத்த இயற்பியலாளர்!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018

உலகெங்கிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே மிகுந்த உத்வேகத்தையும் நம்பிக்கையையும் தன் வாழ்க்கை மூலமும் பேச்சின் வழியாகவும் பரப்பிய  ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் இன்று மறைந்தார்.

 

stephen hawking



ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் ஆவார். இவர் 1948 ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அறிவியல் முடித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வானவியல் மற்றும் பிரபஞ்சயியல் முடித்தார். இவரது 21 ஆவது வயதில் "அமயோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லேரோசிஸ்" எனும் நரம்பு நோயால் தாக்குண்டு உடல் பாகங்கள் அனைத்தும் செயலிழந்து, அதனால் தன் பேச்சையும் இழந்தார் ஹாக்கிங். மருத்துவர்கள் மூன்றாண்டுகளில் உயிரிழந்தவிடுவார் என்று கூறியும் அதனையெல்லாம் கடந்து இன்று தன்னம்பிக்கையோடு 75வது வயதை தொட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் உடல் செயலிழந்த நிலையிலும் தனது பி.ஹெச்.டியை வெற்றிகரமாக முடித்து டாக்டர் பட்டத்தை பெற்றார். அதுமட்டுமல்லாமல் உடல் செயலிழந்த நிலையிலும் தனது பி.ஹெச்.டியை வெற்றிகரமாக முடித்து டாக்டர் பட்டத்தை பெற்றார்.

ஹாக்கிங் சொல்ல  நினைப்பதை வெளிப்படுத்தும் வகையில் அவருக்கென்று பிரத்தியேகமாக கணினி உருவாக்கப்பட்டது. அதன் மூலம் புத்தகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவர் எழுதிய (A BRIEF HISTORY OF TIME) அறிவியல் உலகம் போற்றக்கூடிய புத்தகம் ஆகும். இதில் அண்டம் பெருவெடிப்பு, கருந்துளை (black hole) ஆகியவற்றை பற்றி கூறியுள்ளார். ஐன்ஸ்டைனுக்கு பிறகு உலகின் தலைசிறந்த கோட்பாடு இயற்பியலாளர் இவர்.

தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்து லூக்காசியன் நாற்காலி எனும் உயரிய மரியாதையைப் பெற்றார். பிளாக் ஹோலில் ஒளியுட்பட வேறு எதுவும் வெளியேற முடியாது என்பதை தகர்த்து அதில் துணிக்கைகள் சென்று அதன் மூலம் அவை அழிந்துவிடுகிறது என்று கண்டறிந்தார் அதற்கு  ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர் சூட்டப்பட்டது.

 

young stephen hawking


"A BRIEF HISTORY OF TIME" என்ற புத்தகத்தை 2002ல் ஒரு கோடி ரூபாய் செலவில் "நலங்கிள்ளி தியாகு" என்பவர் 'காலம் - ஒரு வரலாற்று சுருக்கம்' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். "A BRIEF HISTORY OF TIME, THE UNIVERSE IN NUTSHELL" என்ற இரண்டு புத்தகங்களும் உலகளவில் விற்று சாதனை படைத்தது. 

"கோஜீரோஜி" (GO ZERO G) என்ற நிறுவனம் "போயிங்725" என்ற ஈர்ப்புவிசை இல்லாத விமானத்தை உருவாக்கியது. அதினுள் நுழையும்போது விண்வெளியில் இருப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். அதற்கு சென்று வந்த ஹாக்கிங்ஸ் தனது அனுபத்தை செய்தியாளர்களிடம் பகிரும்போது, நான் இதோடு நின்றுவிட மாட்டேன். ரிச்சர்ட் பிரான்சன் என்னை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார் அதற்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன் என கூறினார். இந்த தன்னம்பிக்கைதான் அவரை பல விஷயங்களில் சாதிக்க வைத்துள்ளது.

இந்த அண்டத்திற்கு அப்பாற்பட்டு நடக்கும் விஷயங்களை  அறிவாலும், தொலைநோக்கு பார்வையாலும் அறிந்து, தன் கணினி மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தி உலக மக்களை எச்சரித்தும், பாதுகாத்தும் வருகிறார் ஸ்டீவன் ஹாக்கிங்.
 

ஸ்டீபன் ஹாக்கிங் சில ஆண்டுகளுக்கு முன் இந்த உலகை விட்டு வெகுவிரைவில் வெளியேற வேண்டும் இல்லையெனில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகும் அதற்குள் வெகு விரைவில் வேற்று கிரகத்தை கண்டறிந்து சென்று விட வேண்டும். இல்லையேல் ஆஸ்ட்ரோ பாறை மோதும், சூரியன் பூமியை விழுங்கிவிடும் என்று தெரிவித்தார். இது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இன்று அவர் இந்த உலகை விட்டு வெளியேறிவிட்டார். எங்கிருந்தாலும், எந்த வடிவில் இருந்தாலும் அங்கும் அவர் செயல்பட்டுக்கொண்டேதான் இருப்பார். 

 

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

ஊக்கத்தொகையை பகிர்ந்தளித்த விஞ்ஞானி வீரமுத்துவேல்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

Scientist veeramuthuvel who distributed the incentive

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குத் தமிழக அரசு சார்பில், ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி (02.10.2023) நடைபெற்றது. இந்த விழாவிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றினார்.

 

இந்த விழாவில் தமிழக விஞ்ஞானிகளான கே. சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி. நாராயணன், ஏ. இராஜராஜன், எம். சங்கரன், ஜெ. ஆசிர் பாக்கியராஜ், மு. வனிதா, நிகார் ஷாஜி மற்றும் ப. வீரமுத்துவேல் ஆகிய 9 பேருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை தான் படித்த 4 கல்லூரிகளுக்குப் பிரித்து வழங்கினார். அதன்படி தான் படித்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரி, திருச்சி என்ஐடி, சென்னை ஐஐடி என 4 கல்வி நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகையை சமமாக பிரித்து வழங்கினார்.