Skip to main content

‘எனக்கு சீட்.. இல்லையென்றால் மனைவிக்கு.. அதுவும் இல்லையென்றால்..’ - எம்.எல்.ஏ. கனவில் ஒரு குடும்பம்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

dddd

                                                                             யோகவாசுதேவன்

 

“திமுக ஆட்சியின்போது, 2008-ல் அருப்புக்கோட்டை மதிமுக பிரமுகர் முருகன் கொலை செய்யப்பட்டார். அப்போது, அருப்புக்கோட்டை – ஆத்திபட்டி பஞ்சாயத்து தலைவராக இருந்த, திமுகவைச் சேர்ந்த யோகவாசுதேவனின் உறவினரான ராமானுஜம், இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் யோகவாசுதேவன் உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு கைதானார்கள். 

 

கே.கே.எஸ்.எஸ்.ஆரின் தீவிர ஆதரவாளராக இருந்த யோகவாசுதேவன், பின்னாளில் அருப்புக்கோட்டை யூனியன் சேர்மன் ஆனார். கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நினைத்தாரோ என்னவோ, திடீரென்று அதிமுகவுக்குத் தாவினார்.” எனச் சொன்ன அருப்புக்கோட்டை ஆளும்கட்சி நிர்வாகியிடம், யோகவாசுதேவனின் ‘சுயசரிதை’ இப்போது எதற்கு?’ என்று கேட்டோம். 

 

dddd

                                                                                    ராஜேஸ்வரி

“திமுக மாதிரியே அதிமுகவும் குடும்பக் கட்சிதான். அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார் யோகவாசுதேவன். விருதுநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கும் அவரது முதல் மனைவி ராஜேஸ்வரி, ஆத்திபட்டி பஞ்சாயத்து தலைவரும் கூட. பிறகு, தனக்கேற்ற துணை என்று யோகவாசுதேவனின் தேடலில் கிடைத்தவர் பிரேமா. இவர், அருப்புக்கோட்டை நகர அதிமுக மகளிரணி செயலாளர்.

 

dddd

                                                                               பிரேமா

அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பது இம்மூவரின் கனவாக இருப்பதால், அருப்புக்கோட்டை தொகுதிக்கு சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கு சீட் கிடைக்க வேண்டுமென்பது, எங்களின் பிரார்த்தனையாக உள்ளது.” என்று சீரியஸாகப் பேசினார் அவர்.  


அதிமுக தலைமை அலுவலகத்துக்கு, சீட் கேட்பவர்களின் அருமை பெருமைகளை விளக்கி, உள்ளூர் உறுப்பினர்கள் கடிதம் அனுப்பி வருகின்றனராம். 

 

 

சார்ந்த செய்திகள்