Skip to main content

ஆர்.எஸ்.எஸ், குற்றவாளி, தற்போது இரண்டாம் முறையாக முதல்வர்....

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

பி.எஸ் எடியூரப்பா  தொடக்க காலங்களிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து அதில் ஒரு பெரும் பதவியை பிடித்தவர். 1980 ஆம் ஆண்டில் ஸ்ரீகரிபுரா தாலூகாவின் பாஜக தலைவராகினார். 1985 ஆம் ஆண்டு ஷிமோகாரா மாவட்டத்தின் பாஜக தலைவராகினார். 1988 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தின் தலைவராகினார். 1994 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத்தின் எதிர்கட்சித்தலைவராக இருந்துள்ளார். 1999 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான போட்டியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார், இருந்தாலும் பாஜக தலைமை அவருக்கு எம்எல்சி பதவியை அளித்தது.  2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணியினால் எதிர் கட்சி தலைவராக இருந்தார்.
 

yeddy

 

 

முதன்முதலில் கர்நாடக அரசியலில் இவரது பலத்தை காட்டியது, குமாரசாமி தலைமையில் மக்கள் ஜனதா தள அமைச்சர்கள் காங்கிரசுடன் இருந்த கூட்டணியை தவிர்த்துவிட்டு வெளியேறினர். ஆட்சி குழப்பம் ஏற்பட்டது. அப்போதுதான் எடியூரப்பாவுடன் தன்னை இணைத்துக்கொண்டார் குமாரசாமி. இரண்டு வருடத்தில் இவர்கள் கையில் ஆட்சி அமைக்கப்பட்டது. குமாரசாமிக்கு மட்டும் முதலமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படாமல், இருவருக்கும் 20 மாதங்கள் என்று எடியூரப்பா தரப்பில் பேசப்பட்டது. அக்ரிமெண்டும் போடப்பட்டது. முதல் இருபது மாதங்கள் குமாரசாமிக்கும் அடுத்த இருபது மாதங்கள் எடியூரப்பாவுக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில் இருபது மாதங்கள் நன்றாக ஆட்சியமைத்துவிட்டு குமாரசாமி முதல்வர் பதவியை எடியூரப்பாவுக்கு தர மறுத்தார். எடியூரப்பா கொஞ்சமும் சிரமம் இல்லாமல், இவர்களுடன் இருந்த ஆதரவை முறித்துக்கொண்டு விலகினார். இரண்டு மாதங்கள் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி வந்து அவர்களை நோகடித்தது.
 

 

yeddy with kumarasamy

 

 


பின்னர், எடியூரப்பாவையே 2007 ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்க அழைப்பு வந்தது, பதவியேற்றார். 2008 ஆம் ஆண்டில் ஸ்ரீகரிபுரா தொகுதியில் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவை எதிர்த்து போட்டியிட்டார். பங்காரப்பாவுக்கு எல்லா தரப்பு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது. அப்படி இருந்தபோதும் எடியூரப்பா 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டின் முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிருந்துதான் இவரின் அரசியல் கெடுபிடி காலங்கள் ஏற்படத் தொடங்கின, பெங்களூர் மற்றும் ஷிமோகா போன்ற ஊர்களில் பல நில மோசடிகளும், சட்டவிரோதமான இரும்பு கம்பிகள் ஏற்றுமதி, சுரங்க ஊழல் போன்ற பல வழக்குகள் இவர்மேல் கர்நாடக லோக்ஆயுத் கமிஷன் முன் வைத்தனர். பாஜக மேலிடத்தில் இருந்து இவரை விலக சொல்லி அழுத்தம் அதிகரித்தது. முதலில் ராஜினாமா செய்யப்பட்டார் பின்னர் கட்சியைவிட்டு விலகினார். 15 அக்டோபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். 23 நாட்கள் சிறைவாசம் கழித்து, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் 2012 ஆம் ஆண்டு கர்நாடகா ஜனதா பக்ஷா என்ற கட்சியை தொடங்கினார். 2013 ஆம் ஆண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2014 ஆம் ஆண்டு மீண்டும் பாஜகவுடன் அவர் இணைந்தார், கட்சியையும் சேர்த்துதான். 2015 ஆம் ஆண்டு ஆளுநர் வஜூபாய் வாலாவால் மீண்டும் இவரது வழக்குகள் சரி பார்க்கப்பட்டு, பழைய வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  2016 ஆம் ஆண்டு கர்நாடக பாஜகவின் தலைவராகினார்.
 

yeddy with modi

 

 


2018 ஆம் ஆண்டு, இந்த சர்ச்சையான சூழலில் அவசர அவசரமாக கர்நாடக முதல்வராக பதவிப்பிரமாணம், ஆளுநர் தலைமையில் எடுத்துக்கொண்டார். உடனடியாக ஒரு லட்சம் வரையிலான விவசாய கடன் ரத்து என்று முழு முதல்வரைப்போல அறிவித்துவிட்டார். இன்னும் 15 நாட்களே இருக்கிறது பெருபான்மையை நிரூபிக்க. அதற்குள் இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் பாஜகவை எதிர்த்து நியாயம் கேட்க வெற்றி நடைபோட உள்ளனர் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...