Skip to main content

நீங்கள் ரயில் பயணத்தை மேற்கொள்பவரா, உஷார்!!! உங்கள் உடமைக்கு மட்டுமல்ல, உயிருக்கும் ஆபத்து இருக்கிறது...

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

இன்றைய காலகட்டத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைப்பது ரயில்கள்தான். குறைந்த செலவில் நீண்ட தூரம் செல்லவும், இடையூறு இல்லாத பயணத்திற்கும் ஏற்றது ரயில்கள்தான். சென்னை போன்ற பெருநகரங்களில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைவருக்கும் ரயில்கள்தான் ஏற்றவையாக இருக்கிறது.

 

train



அண்மையில் நாம் அடிக்கடி கேள்விப்படும் செய்தி... படியில் பயணம் செய்தவரை தாக்கி செல்போன் பறிப்பு என்பது. பொதுவாகவே நாம் அனைவரும் இடைவிடாமல் செல்போன்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த பழக்கம்தான் அவர்களின் டார்கெட். ஆள், அரவமில்லாத ரயில்வே ட்ராக்குகளில் ஒரு கூட்டம் நின்று கொண்டிருக்கும் அவர்கள் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்களை கவனித்துக்கொண்டே இருப்பர். குறிப்பாக ரயில் படிக்கட்டுகளில் தங்களின் செல்போன்களை பயன்படுத்திக்கொண்டே பயணம் செய்பவர்களை... அப்படி அவர்களைக் கண்டவுடன் ஒரு பெரிய குச்சியை எடுத்து அவர்களை தாக்குவார்கள். இதில் அதிர்ச்சியடையும் அந்த நபர் தன் கையில் இருக்கும் செல்போன் உள்ளிட்டவைகளை அப்படியே தவறவிடுவார். அதை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் சென்றுவிடும். பெரும்பாலும் ரயில் நிற்கும் முன் அவர்கள் ஓடிவிடுவதால் அவர்களை பிடிக்க முடிவதில்லை. 
 

சமீபத்தில் இது அதிகரித்து வருகிறது. இவர்கள் இப்படி செய்வதால், அந்த தாக்கப்படுபவர் தடுமாறி கீழே விழுந்து விடுகிறார். இது அவர்களின் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது. செல்போன் பயன்படுத்துவது அவரவர் உரிமை அதில் தலையிடுவது தவறு, படியில் நின்றுகொண்டோ, உட்கார்ந்தோ பயணம் செய்யாதீர்கள்... அது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். இந்த மாதிரியான தாக்குதலால் மட்டும் ஆபத்து நேருவது கிடையாது. நிறைய பயணிகள் படிக்கட்டில் பயணம் செய்து இறந்திருக்கிறார்கள். படியில் மேற்கொள்ளும் பயணம், நொடியில் மரணத்தை ஏற்படுத்திவிடும்.