Skip to main content

நீங்களே மந்திரியாகுங்கள், என் மகனுக்கு பதவி வேண்டாம் - ஓபிஎஸ் அதிரடி முடிவு! 

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

தமிழகத்திற்கு அடுத்த டி.ஜி.பி.யாக ஜாபர் சேட்டை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறீர்கள். முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அவர் தி.மு.க.வுக்கு நெருக்கமானவர் என ரிப்போர்ட்டுகள் வருகிறது' என எகிறினார். 'அவர் வந்தால்தான் தி.மு.க.வை சமாளித்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற முடியும்' என்று சமாளித்த வேலுமணி, ஜாபர் சேட் தமிழகத்தைச் சேர்ந்தவர். எங்களால் அவரிடம் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். அவர் தான் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்தார். முதல்வர் எடப்பாடி அவரை விரும்புகிறார் என்று சொல்லியும் அமித்ஷா சமாதானமாகவில்லை. "சட்டமன்ற இடைத் தேர்தல்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சூலூர் தேர்தல் முடிவுகளிலேயே தெரிந்துவிட்டதே' என்ற அமித்ஷா, "தலைமைச் செயலாளர்- டி.ஜி.பி. இரண்டு பதவிகளிலும் மத்திய அரசு சொல்வதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும்' என எச்சரித்து அனுப்பிவிட்டார்.

 

velumani



அதற்காகத்தான் கவர்னரை எடப்பாடி சந்தித்தார். இந்த சந்திப்பு கவர்னர் செயலாளர் ராஜகோபால் சம்பந்தப்பட்ட டிஸ்கஷனுக்காகத்தான் என்பதால் அவர் தனி அறையில் காக்க வைக்கப்பட்டார். டெல்லி சொல்லியிருந்ததை மனதில் வைத்திருந்த கவர்னரும் தன் பங்குக்கு, "எனது செயலாளராக உள்ள ராஜகோபாலை தலைமைச் செயலாளராக்கினால் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உங்களுக்கு கைகொடுக்கும்' என்றார்.

 

ops



"நான் ஜாபர்சேட்டை டி.ஜி.பி.யாக்க நினைக்கிறேன். பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஒரு உயர் அதிகாரி திரிபாதியை டி.ஜி.பி.யாக்க வேண்டு மென்கிறார். நான் என்னுடன் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றிய ராஜீவ் ரஞ்சனை தலைமைச் செயலாளராக்க நினைக்கிறேன். நீங்களும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் ராஜகோபாலை தலைமைச் செயலாளராக்க வேண்டும் என்கிறீர்கள். நான் என்ன செய்வது' என புலம்பியிருக்கிறார் எடப்பாடி.

 

ops



இதற்கிடையே சண்டைக்காரனாக இருக்கும் பா.ஜ.க. காலில் விழுவதை விட சாட்சிக்காரனாக இருக்கும் ஓ.பி.எஸ். காலில் விழலாம் என ஓ.பி.எஸ்.சை கூப்பிட்டு பேசியிருக்கிறார் எடப்பாடி. அதன்பின் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி ஆகியோர் வைத்திலிங்கத்திடம் பேசியிருக் கிறார்கள். "அமைச்சர் பதவி விவகாரம் முடிந்து போன விவகாரம். அடுத்த மத்திய அமைச்சரவை விரிவாக்கம் ஜூலை மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து ஆகஸ்டு மாதம்தான் நடக்கும். அப்பொழுது பேசிக் கொள்ளலாம். அ.தி.மு.க.விற்கென ஒரு கேபினெட் அந்தஸ்தும் ஒரு ராஜாங்க மந்திரியும் கேட்டோம். கேபினெட் தந்தார்களென்றால் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ராஜாங்க மந்திரி பதவியை எனது மகன் எடுத்துக் கொள்ளட்டும்' என ஓ.பி.எஸ். பேசியிருக்கிறார். உடனே வைத்திலிங்கம் "ஒரு பதவி என பா.ஜ.க. சொன்னால் என்ன செய்வது' என கேட்டிருக்கிறார். "அப்படியென்றால் நீங்கள் மந்திரியாகுங்கள். என் மகனுக்கு பதவி வேண்டாம்' என ஓ.பி.எஸ். சொல்ல குளிர்ந்திருக்கிறார் வைத்திலிங்கம்.

 

ops



கோபத்தில் கொந்தளிக்கும் பா.ஜ.க.வை சமாளிக்க ஜூலை 12-ம் தேதி காலியாகும் மாநிலங்களவை இடத்தில் ஒன்றை பா.ஜ.க.வுக்கு கொடுத்து அதில் அமித்ஷாவின் அன்பைப் பெற்ற கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நிறுத்தி வெற்றி பெற வைக்கலாமா என ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலையில், ஓ.பி.எஸ்., பா.ஜ.க.விடம் மட்டும் தனது ஆதரவை அதிகரித்துக் கொள்ளவில்லை. சசிகலா தரப்பிலும் தனது ஆதரவு நிலையை அதிகரித்துள்ளார். சிறை யில் இருந்து சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக டெல்லித் தொடர்புடன் இருப்பதாக, பரப்பன அக்ரகாரத்திற்கு ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து தகவல் போயிருப்பதாக சசிகலா சொந்தங்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

ஓ.பி.எஸ்., எடப்பாடி, சசிகலா இவர்களுடன் தற்பொழுது பா.ஜ.க. என இன்னும் எத்தனை சோதனைகளோ என அ.தி.மு.க. அடிமட்டத் தொண்டர்கள் நொந்து போயுள்ளனர்.. இதெல்லாம் போதாதென்று அ.தி.மு.க.வில் ஆக்டிவ்வாக இல்லாமல் ஓரங்கட்டப்பட்டிருக்கும் ஒரு குரூப், "அ.தி.மு.க. தலைவராக ரஜினி வர வேண்டும் என்று பேசுங்கள்' என தொலைக்காட்சி பேச்சாளர்களை கிளறிவிட, "யாரும் எதைப்பற்றியும் பேசக்கூடாது' என சேனல் விவாதங்களில் பங்கேற்க மொத்தமாக தடைவிதித்து விட்டது அ.தி.மு.க. தலைமை.