Skip to main content

ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் ஆண்மை குறைவு ஏற்படுமா..? - மிஸ்டர் வேல்டு மணிகண்டன் பதில்!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

உடல் வளர்த்தோர் உயிர் வளர்த்தோர் என்ற பழமொழி நம்மிடம் உள்ளது. உடலை வலிமைப்படுத்துதல், ஆரோக்கியமாக வைத்திருத்தல் முதலியற்றில் முனைப்பு கொண்ட சமூகமாகவே நாம் இதுவரை இருந்து வந்திருக்கிறமோம். பழங்காலத்தில் இளவட்ட கல்லை தூக்குவதில் ஆரம்பித்த அந்த முறை தற்போது பாடி பில்டிங் வரை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. இது வயதானவர்கள் முதல் இளையவர்கள் வரை அனைவரும் தேடி போகின்ற ஒரு துறையாக அமைந்திருக்கின்றது. அந்த துறையில் என்ன இருக்கும், எந்த மாதிரியான சாதக பாதகங்கள் இருக்கின்றது என்பதை தற்போது அந்த துறையில் சாதித்து வரும் மணிகண்டன் மூலமாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.

 

பு



உடற்பயிற்சி செய்பவர்கள் தொடர்ந்து புரோட்டீன் புவுடர் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் பல்வேறு பிரச்சனைகள் எற்படுகின்றது என்று சொல்லப்பட்டாலும் அதனை எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை இதுவரைக்கும் குறையவில்லை. இதன் உண்மைதன்மை என்ன. புரோட்டீன் புவுடர் எடுத்துக்கொண்டால் உடலில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

நீங்களே சொல்லிவிட்டீர்கள் புரோட்டீன் புவுடர் எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறையிவில்லை என்று. அப்படி என்றால் அதில் எந்த தீமையும் இல்லை என்றுதானே அர்த்தம். புரோட்டீன் புவுடர் எடுத்துக்கொள்வதினால் எந்த தீங்கும் ஏற்படாது. மனித உடலுக்கு தினமும் புரோட்டீன் தேவை. உடலின் எடை 70 கிலோ என்றால் மினிமம் 70 கிராம் புரோட்டீன் உடலுக்கு தேவை. ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் 4 கிராம் புரோட்டீன் கிடைக்கும், இறைச்சி சாப்பிடுவதன் மூலம் 25 கிராம் புரோட்டீன் உடலுக்கு கிடைக்கும்.  இவை அனைத்தையும் சாப்பிட்டாலும் மனித உடலுக்கு தேவையான புரோட்டீன் சரியான விகித்தில் கிடைப்பதில்லை. மீதி இருக்க கூடிய புரோட்டீனை நாம் எப்படி சாப்பிட முடியும். இந்த வழிகளில் உடலுக்கு தேவையானவர்கள் புரோட்டீன் புவுடர் மூலம் எடுத்துக்கொள்கிறார்கள். 13 வயதுக்கு உள்ளிட்டோருக்கான கிரிக்கெட் விளையாடும் சிறுவனும் புரோட்டீன் புவுடரை எடுத்துக்கொள்கிறான். இந்த புரோட்டீன் பவுடரால் எந்த தீங்கும் ஏற்படாது என்பது உண்மை.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் ஆண்மை குறைவு ஏற்படும் என்று கூறுவது உண்மையா? 

இந்த போட்டியின் பெயரே ஆணழகன். எதற்கு முன்னோர்கள் இந்த பெயரை வைத்தார்கள் என்றால் ஆணோட அழகே ஆண்மைதான். அது இந்த விளையாட்டில் அதிகரிக்கத்தான் செய்யும். 

பிறகு ஏன் தொடர்ச்சியாக இந்த குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள்?

ஒருத்தரால் ஒண்ணும் முடியவில்லை என்றால் அதற்கு காரணம் இதுதான் என்று முடிவு செய்துவிடுவார்கள். இவன் ஜிம்முக்கு போறான், அதனால்தான் என்று முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவரின் உடலில் டெஸ்டோஸ்டீரன் குறைவாக இருக்கின்றதா, ஸ்பெர்ம் கவுண்ட் சரியா இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. இதை எதுவுமே செய்யாமல் உடற்பயிற்சி செய்வதுதான் அதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. மாறாக சில வகையான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் டெஸ்டோஸ்டீரன் அளவு அதிகரிக்க செய்கின்றது. எனவே இது ஆண்மைக்கு மேலும் அழகு சேர்க்கு ஒன்றாகவே இருந்து வருகின்றது. மற்றபடி தவறான தகவல்களை புறந்தள்ள வேண்டும்.