Skip to main content

ம.நடராசன் யார்? ஜெ.வுக்கு அறிமுகமானது எப்படி?

Published on 20/03/2018 | Edited on 20/03/2018



 

vksasikala-m.nadarajan


தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் 23 அக்டோபர் 1943-ம் ஆண்டில் நடராசன் பிறந்தார். மாணவர் பருவத்தில் தமிழ் மீது நடராசனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 1965 காலகட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் பெரும் பங்காற்றினார். மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அண்ணாவின் கவனத்தை நடராசன் ஈர்த்தார். 


அதனைத்தொடர்ந்து 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் தொடர்பு அதிகாரியானார் நடராசன். மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலாவை 1975-ல் நடராசன் திருமணம் செய்துகொண்டார். அப்போதைய முதல் அமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் தலைமையில் ம.நடராஜன் - வி.கே.சசிகலா திருமணம் நடைபெற்றது. 
 

1980களில் தென் ஆற்காடு மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்ததால் சந்திரலேகா ஐ.ஏ.எஸ். அறிமுகம் நடராஜனுக்கு கிடைத்தது. சந்திரலேகா மூலம் ஜெயலலிதாவுடன் நடராஜனுக்கு அறிமுகம் கிடைத்தது.

 

vksasikala-m.nadarajan


 

நடராசன் காலப்போக்கில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறிப்போனார். 1985-ல் நேரடி அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக நடராசன் செயல்பட்டார். 
 

எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்னர் 1982ல் ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வீடியோ எடுக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது தனது மனைவி சசிகலா வினோத் வீடியோ விசன் நடத்தி வருவதாக ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினார் நடராஜன். அதன் மூலம் வேதா நிலையத்திற்குள் அடி எடுத்து வைத்தார் சசிகலா.
 

ஜெயலலிதாவிற்கு அனைத்து அரசியல் ஆலோசனைகளையும் தருவது நான்தான் என்று நடராஜன் சொன்னதாக தகவல் வந்ததும் அப்போது முதல் நடராஜன் - ஜெயலலிதா இடையே பிரச்சினை வெடித்தது. நடராஜனா, நானா (ஜெ.) என்ற கேள்வியில் தோழிதான் என்று முடிவெடுத்தார் சசிகலா. அப்போது முதல்  ஜெயலாலிதாவுடன் தங்கி விட்டார் சசிகலா. 
 

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் சசிகலா இருப்பது குறிப்பிடத்தக்கது. கணவர் நடராசன் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோலில் சசிகலா வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பரோல் கோரி சசிகலா இன்று மனு அளிக்க  உள்ளார். நடராசனின் இறப்பு சான்றிதழை கொடுத்தவுடன் சசிகலாவுக்கு பரோல் தரப்படும் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

Next Story

‘பல பேருக்கு வாழ்வு தந்த பெரியப்பா!’ -நினைவு நாள் போஸ்டரில் எம்.நடராஜன்!

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

வாழும் காலத்தில் நிழல் மனிதர் என்றே அழைக்கப்பட்டார், எம்.நடராஜன். சசிகலா நடராஜன் என, மனைவியின் பெயரை வைத்தும் அடையாளம் காணப்பட்டார். புதியபார்வை ஆசிரியர் என்பதெல்லாம் வெறும் லேபில்தான்.  ஆனாலும், ஒருகாலத்தில் அதிகார மையமாக தமிழக அரசியலை திரைக்குப் பின்னால் இருந்து இயக்கினார்.

 

m.nadarajan Memorial Day poster in madurai


மார்ச் 20, அவரது நினைவுநாள். ‘பல பேருக்கு வாழ்வு தந்த பெரியப்பா’ என்று அவருக்கு அஞ்சலி செலுத்தி மதுரையில் சொற்ப அளவில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். சின்னம்மா (சசிகலா) கணவர் எப்படி பெரியப்பா ஆனார்? என்ற கேள்விக்கு,  “அந்தப் போஸ்டரை அச்சிட்டவருக்கு அவர் பெரியப்பா.. அவ்வளவுதான்.. ‘பல பேருக்கு வாழ்வு தந்தவர்’ என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று அவரது சொந்த பந்தங்களில் பலரும் அள்ள அள்ளக் குறையாத செல்வத்துடன் வளம்பெற்று வாழ்வதற்குக் காரணம், எம்.நடராஜனும் அவரது மனைவி சசிகலாவும்தான். நியாயமாகப் பார்த்தால்,  நடராஜனால் முன்னுக்கு வந்த அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்த முன்வந்திருந்தால், தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு இன்று சுவரே இருந்திருக்காது.  அந்த அளவுக்கு சொந்தபந்தங்களில் இருந்து, அரசியல்வாதிகள் வரை பலருக்கும் அடையாளம் தந்திருக்கிறார். ஆனாலும், அரசியலில் அந்த விசுவாசத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாதே?” என்றார், சசிகலா  ஆதரவாளர் ஒருவர்.

தமிழ் செயற்பாட்டாளர் என்பதால்,  2009-ல் நடந்த ஈழத்தின் இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாகவும் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையிலும் தஞ்சை விளார் சாலையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு இரண்டரை ஏக்கர் நிலம் வழங்கினார், எம்.நடராஜன்.

அவ்வப்போது கடும் விமர்சனத்துக்கு ஆளான போதிலும்,  தமிழக அரசியலின் வரலாற்று பக்கங்களில் எம்.நடராஜனும் இடம் பிடித்திருக்கிறார்.  அவரது அரசியல் எதிரிகள்கூட இதை மறுக்க முடியாது.  

 

 

Next Story

கண் கலங்கிய தினகரன்...

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

புதியபார்வை ஆசிரியர் ம.நடராசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சையில் அவரது தமிழரசி மண்டபத்தில் ஆசிரியர் வீரமணி தலைமையில் நடந்தது. விழாவில் திமுக மாஜி எல்.ஜி, காசி ஆனந்தன், தனியரசு எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு நடராசன் வாழ்க்கை குறிப்பு ஆவணப்படத்தை வெளியிட்டனர்.

 

dinakaran

 

விழா ஏற்பாடுகளை மருப்பா அறக்கட்டளை சார்பில் செய்திருந்தாலும் தினகரனின் அமமுகவினரே நிறைந்திருந்தனர். விழாவில் பேசிய தினகரன். அரசியல் பேசவில்லை. என் சித்தப்பா நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று சின்னம்மா கேட்டுக் கொண்டார். அதனால் என் வேலைகளை தள்ளிவைத்துவிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லும் போதே கண்கள் கலங்கி பேச்சை முடித்துக் கொண்டார்.

 

dinakaran

 

சில மாதங்களுக்கு முன்பு நடராசனின் பிறந்த நாளை மறந்த தினகரன் தேர்தல் காலம் என்பதாலோ என்னவோ நினைவு நாளை அனுசரிக்க வந்துள்ளார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். நினைவு நாள் விழாவுக்கு  திவாகரன் உள்பட சசிகலா உறவினர்களை காணமுடியவில்லை.