Skip to main content

"அண்ணா இறந்த தினத்தில்தான் சிம்பு பிறந்தார்.. இதிலிருந்து என்ன தெரிகிறது..." - தியேட்டர் வாசலில் கதகளி ஆடிய கூல் சுரேஷ்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

lk

 

 

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் நீண்ட தடைகளைத் தாண்டி நேற்று (25.11.2021) வெளியானது. படத்தைப் பார்த்த திரைப்பட நடிகர் கூல் சுரேஷ் இதுதொடர்பாக கூறியதாவது, " பல தடைகளைத் தாண்டி ‘மாநாடு’ திரைப்படம் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. மூன்று வருடம், இரண்டு வருடம் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் தற்போது பதில் கிடைத்துள்ளது. நான் படத்தைப் பார்த்துவிட்டேன். படம் மாஸா, சூப்பரா இருக்கு. வெங்கட் பிரவு சார் படத்தை அருமையாக எடுத்து முடித்திருக்கிறார். ஹரோயின் லட்டு மாதிரி இருக்கிறார். சிவா மாஸ்டர் அருமையாக பண்ணியிருக்கிறார்.

 

இனிமேல் அவர் ஹாலிவுட் படங்களுக்குத்தான் சென்று பணியாற்ற வேண்டும். அந்த அளவுக்கு அருமையாக செய்திருக்கிறார். துப்பாக்கி சுட்டபோதுதான் அன்றைக்கு எஸ்.ஜே. சூர்யா சொன்ன தீபாவளி மேட்டர் ஞாபகம் வருது. படத்தைப் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்கள். மியூசிக் படு சூப்பராக இருந்தது. படத்தில் பிஜிஎம் வரும் இடங்கள் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. வந்திருக்கும் ரசிகர்கள் சிம்புவுக்கா இல்லை யுவனுக்கா என்று சந்தேகப்படும் அளவிற்கு மிகச் சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தைப் பற்றி பலரும் பல கதைகளைச் சொல்லிவந்தார்கள். படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். இந்த நேரத்தில் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

பலரும் அவரிடம் சிம்புவை வைத்தா படம் பண்ணப் போகிறீர்கள் என்று அவரைக் குழப்பிப் பார்த்தார்கள். ஆனால் படம் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இதற்காக முதலில் நன்றி சொல்ல வேண்டும். இந்த ‘மாநாடு’ சாதாரண மாநாடு இல்லை, மாநகராட்சி மாநாடு, மதுரை மாநாடு, மெர்சலான மாநாடு, மங்காத்தா மாநாடு, மலேசியா மாநாடு. மற்ற படத்திலே இருந்து இரண்டு சீன் சுட்டிருக்கிறார்கள், அந்தப் படத்திலிருந்து இரண்டு சீன் எடுத்திருக்கிறார்கள் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. சுடணும் என்று நினைத்தால் எஸ்.ஜே. சூர்யாதான் துப்பாக்கி வைத்து சுடணும். அப்படி படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

 

படம் அருமையாக இருக்கு. இந்த நேரத்தில் சிம்பு ரசிகர்களை எல்லாம் நான் பாதம் தொட்டு வணங்குகிறேன். சிம்புவை ஒன்று செய்ய முடியாது, அவர் ஒரு காட்டாறு. தொட முடியாது. சிம்பு எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. ஆனால் இந்தக் கஷ்டத்தை எல்லாம் பார்த்தால் நாம் ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்று தோன்றுகிறது. ட்விட்டரில் என் பெயரில் கணக்கு தொடங்கி தவறான தகவல்களைத் தெரிவிக்கிறார்கள். அண்ணா அவர்கள் பிப்ரவரி 3ஆம் தேதிதான் இறந்தார். சிம்பு அவர்கள் பிப்ரவரி 3ஆம் தேதிதான் பிறந்தார். இதிலேர்ந்து என்ன தெரியுது, அண்ணா அவர்கள் இறந்த பிறகு அவரின் ஆத்மா எங்கே வந்தது, நேரா எஸ்டிஆரிடம் வந்துவிட்டது. அதனால் அண்ணாவிடம் உள்ள நல்ல குணங்கள் அனைத்தும் சிம்புவிடம் வந்து சேர்ந்துள்ளது. எனவே அறிவில்லாமல் யாரும் ட்விட்டரில் பேச வேண்டாம்" என்றார்.