Skip to main content

'அயோத்தியில் என்ன நடந்தது... எப்போது நடந்தது..' - வரலாறு ஒரு மீள்பதிவு!

Published on 09/11/2019 | Edited on 09/11/2019

1528: அயோத்தியில் முஸ்லிம் மன்னர் பாபர் ஒரு மசூதியை காட்டுகிறார். அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று இந்துத்துவ அமைப்பினர் உரிமை கோரினார்கள்.

1853: இதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அந்த இடத்தை இருபிரிவுகளாக பிரித்து உட்பகுதியை இஸ்லாமியர்களுக்கும், வெளிப்பகுதியை இந்துத்துவ அமைப்பினருக்கும் ஒதுக்கியது பிரிட்டிஷ் அரசு.

1949: சுதந்திரத்துக்கு பிறகு மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதற்கு இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படவே, இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. இதையடுத்து அது பிரச்னைக்குரிய இடம் என்று அறிவித்த மத்திய அரசு அந்த இடத்தை பூட்டி சீல் வைத்தது.

1950: ராமர் சிலைக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்கவேண்டும் என இரண்டு மனுக்கள் இந்து அமைப்பினர் பைசாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
 

fd



1961 : உத்திரபிரதேச சன்னி வக்ப் வாரியத்தின் சார்பில் இடத்தைத் தங்களிடம் அளிக்கக்கோரியும் அங்குள்ள சிலைகளை அகற்றவேண்டும் என்றும் கோரியும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

1986 : அயோத்தியில் பிரச்னைக்குரிய இடத்தின் கதவுகளின் பூட்டை அகற்றவும், ராமர் சிலைக்கு பூசைகள் செய்யவும் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

1992: இந்துத்துவ கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, நாடு முழுதும் மோதல்கள் ஏற்பட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

2001 : பாபர் மசூதி இடிப்பு மற்றும் வன்முறை குறித்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக கூறப்பட்ட அத்வானி, கல்யாண் சிங் உள்பட 13 பேரை விடுவித்தது. வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வந்தது.

2010 : அயோத்தி விவகாரத்தில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழங்கிய தீர்ப்பில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை ராமர் கோவிலுக்கும், ஒரு பங்கு இடத்தை வக்ப் வாரியத்துக்கு வழங்கி தீர்ப்பளித்தது.

2011 : இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

2017 : ராமர் கோவில் - பாபர் மசூதி பிரச்னை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியில் பேசி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

2019 மார்ச் 8 : இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பிடம் பேசி முடிக்க நடுவர் குழுவுக்கு எட்டு வாரம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2019 ஆகஸ்ட் 1 : நடுவர் குழு தந்தது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.

2019 ஆகஸ்ட் 2 : அயோத்தி விவகாரத்தில் நடுவர் குழு சரியான தீர்வை அடையாமல் தோல்வி அடைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

2019 நவம்பர் 9: இந்த நிலையில் நூற்றாண்டுகளாக தீர்க்க முடியாமல் இருக்க கூடிய இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை  இன்று வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.