Skip to main content

ஈழ மக்களுக்காக "எல்லாளன்' படை!

Published on 11/02/2018 | Edited on 11/02/2018
""ஹலோ தலைவரே, போர் முடிந்தும் துயரம் தீராத தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமா ’"எல்லாளன்'ங்கிற பேர்ல மேற்கத்திய நாடுகளில் விறுவிறுப்பா ஒரு வேலை ஆரம்பிக்கப்பட்டிருக்கு.''’ ""தமிழீழப் போரில் மறக்கமுடியாத அத்தியாயங்கள்ல ஒண்ணா 2007-ல் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்!

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

Tamil Nadu student joins Ukrainian army

 

ரஷ்யா, உக்ரைன் மீது ஒருவாரமாக கடும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. இந்த சூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. கடல் பகுதியிலிருந்தும், வான்வெளியாகவும் ஏவுகணைகளை வீசி தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் ரஷ்யா, கீவில் உள்ள கீவ் நீர்மின் நிலையத்தைக் கைப்பற்றியதாகக் கூறியுள்ளது.

 

அங்கிருந்து இந்திய மாணவர்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் நிலையில் அங்கிருக்கும் தமிழக மாணவர் ஒருவர் உக்ரைனின் துணை ராணுவத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் கோவை மாவட்டத்திலிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு விமானவியல் பற்றி படிச்சச் சென்ற சாய் நிகேஷ் என்ற மாணவன் போர் சூழலில் ஜார்ஜியன் நேஷ்னல் லிஜியன் என்ற உக்ரைனின் துணை ராணுவத்தில் இணைத்துக்கொண்டுள்ளார். உளவுத்துறையின் விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த மாணவர் சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து குறித்து அவரது பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில் இளைஞரின் இந்த செயல் குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்தி வருகிறது.  

 

 

Next Story

மதிவதனிக்கும்,ஈழத்து மக்களுக்கும் தமிழ் கற்பித்த பேராசிரியர் மறைவு..!!!

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

இறுதிவரை தமிழ் தேசியவாதியாகவும், நாத்திகனாகவும் வாழ்ந்து தமிழ்ப்பணியற்றிய தமிழ் தேசியப் பேராசிரியர் இன்று தமிழ்ப் பணியை நிறைவு செய்து கொண்டுள்ளது ஈழத்து தமிழ் மக்களுக்கும், புலம் பெயர் தமிழ் மக்களுக்கும் சொல்லெணாத் துயரத்தை தந்துள்ளது.

 

 Mathivathanan and Eelam people teaching Tamil...


தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் 1964முதல் 1996 வரை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுப்பெற்றவரும், கடையம் வஉசி தெருவில் வசித்து தமிழ்ப் பணியாற்றியவருமான பேராசிரியர் அறிவரசன் என்ற மு.செ.குமாரசாமி வயதின் மூப்பின் காரணமாக புதன்கிழமையன்று மறைந்தார். விடுதலை நாளேட்டின் துணையாசிரியராக பணியாற்றிய இவர் "தமிழர் தாயகம் "சிற்றிதழையும் மறையும் வரை நிறுவன ஆசிரியராக நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. பெரியார் பெருந்தொண்டரான இவர் சிறந்த தமிழ்ப்ற்றாளரும் கூட.!! இதனை அடிப்படையாகக் கொண்டு 2006ம் ஆண்டு மதிவதினிக்கும், ஈழத்திலுள்ள ஆசிரியர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுக்க தமிழ்தேசியப் போராளி பிரபாகரனிடமிருந்து நேரடியாக அழைப்பு வர, அவ்வழைப்பினை ஏற்றுக்கொண்டு 2006ம் வருடம் மார்ச் மாதம் இலங்கை சென்றார். மதிவதினி உள்ளிட்ட 25 பெண்கள் உட்பட 40 நபர்களுக்கு செஞ்சோலை எனுமிடத்தில் தமிழ் கற்பித்தார். சுமார் 2 வருட காலம் ஈழத்தமிழர்களுக்காக தமிழ் கற்பித்தவர் 2008ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு திரும்பினார்.

அத்துடன் இல்லாமல் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் பிரான்ஸிற்கு சென்று புலம் பெயர் தமிழர்களின் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட தமிழ் பள்ளிகளுக்கும் பாடத்திட்டம் வகுத்துக் கொடுத்து தமிழாசிரியர் பயிற்சியும் அளித்தது குறிப்பிடத்தக்கது. தென்மாவட்டங்களில் திராவிட- தமிழ்தேசிய இயக்கங்களின் மிக முக்கிய அறிவு ஆளுமையாகவும் விளங்கிய இவர் தனது 80 வயதில் இன்று மாலை (4-3-2020) கடையத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இவரது உடல் நாளை நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொடையாக வழங்கப்பட உள்ளது.