Skip to main content

புது மதம் லிங்காயத்!

Published on 20/03/2018 | Edited on 21/03/2018
கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 17 சதவிகிதம் பேர் லிங்காயத் சமூகத்தை சார்ந்தவர்கள்தான். இவர்கள் சிவனை மட்டுமே வழிபடுபவர்கள். வீரசைவர்கள் என்றும் அழைக் கப்படுகின்றனர். 12-ம் நூற் றாண்டில் சாதிய பாகுபாடு களை களைய பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதியான பசவேஷ் வரா இந்த சமூகத்தின் ம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

லிங்காயத்து மடாதிபதியிடம் லிங்க தீட்சை பெற்ற ராகுல் காந்தி எம்.பி. (படங்கள்) 

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி லிங்காயத்து மடத்தில் இருந்து லிங்கதீட்சைப் பெற்றுள்ளார். 

 

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடம் ஒன்றிற்கு சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, அங்குள்ள மடாதிபதி சிவமூர்த்தி முருக முட், சிவமூர்த்தி முருக சரண ஆகியோரிடம் ஆசி பெற்றார். பின்னர், படிகத்தினால் ஆன சிவலிங்கத்தைப் பெற்று லிங்க தீட்சையையும் ராகுல் காந்தி பெற்றார். லிங்கத்தை கழுத்தில் அணிந்து தினந்தோறும் வழிபடுமாறு ராகுல் காந்தியைக் கேட்டுக் கொண்டதாக மடாதிபதி தெரிவித்துள்ளார். 

 

சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவுக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, லிங்காயத்து மடாதிபதிகளை நேரில் சந்தித்திருந்தார். தற்போது ராகுல் காந்தியும் லிங்காயத்து மடாதிபதியைச் சந்தித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

கர்நாடகாவின் புதிய முதல்வர் பதவியேற்பு!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

basavaraj bommai

 

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வார் என நீண்டநாட்களாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் நேற்று முன்தினம் (26.07.2021) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது.

 

இந்தநிலையில், நேற்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ கூட்டத்தில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை தேர்தெடுக்கப்பட்டார். இவர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தநிலையில், கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெஹ்லோட், பசவராஜ் பொம்மைக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.