Skip to main content

தினகரன் பூச்சாண்டி! இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். மிரட்சி!

Published on 17/03/2018 | Edited on 18/03/2018
டி.டி.வி. தினகரன் மதுரையில் நடத்திய கூட்டம் எடப்பாடி அணியில் ஏகப்பட்ட கிலியை உருவாக்கியுள்ளது. மதுரையில் காலையில் டி.டி.வி. புதுக்கட்சி ஆரம்பிக்க, எடப்பாடி பட்ஜெட் தாக்கல் செய்த அதே நாள் மாலையில், அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் "சட்டமன்றக் கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்' என ஆ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

"அ.தி.மு.க.வை யாரும் வீழ்த்தமுடியாது!" - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

thiruvallur district, admk party meeting deputy cm ops speech

 

அ.தி.மு.க.வை யாரும் வீழ்த்த முடியாது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூரில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க. மிகப்பெரிய இயக்கம், அதனை யாரும் வீழ்த்த முடியாது. தி.மு.க.வை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தவே அ.தி.மு.க.வை தொடங்கினார் எம்.ஜி.ஆர். தவறான வழியைப் பின்பற்றும் தி.மு.க.வினால் எக்காலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இந்தியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை விளங்கச் செய்தது அ.தி.மு.க. அரசு. தமிழக மாணவர்கள் நலன் கருதி கல்வித்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கியவர் ஜெயலலிதா. வீடு இல்லாத ஏழை மக்களுக்காக தற்போது வரை 6 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன" என்றார்.

 

 

Next Story

இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மீண்டும் உரசல்? அமைச்சர்கள் கவலை?

Published on 30/10/2020 | Edited on 30/10/2020
eps-ops

 

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் நீண்ட பேச்சுவார்த்தை, விடிய விடிய பஞ்சாயத்து என நடந்து ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வமே வெளியிட்டார். அதன்பிறகு ஓ.பி.எஸ். வீட்டுக்கு இ.பி.எஸ். சென்றார். இதனால் பஞ்சாயத்து நடத்திய அமைச்சர்கள் நிம்மதி அடைந்தனர்.

 

இதனிடையே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இந்த முறையும் தேர்தல் களத்தில் கதாநாயகனாக வேண்டும் என்கிற திட்டத் தோடு டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, அதைக் கவனமாகத் தயாரித்து வருகிறார்களாம். வழக்கமாகத் தரப்படும் தேர்தல் வாக்குறுதி களுடன், சமூகம் சார்ந்தும், மாவட்ட பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தந்தும் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டு வருவதாக சொல்கிறார்கள். 

 

அதே நேரத்தில், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பது பற்றி எடப்பாடியிடம் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ். அவர் அதில் அக்கறை காட்டாததால், கட்சியின் வழிகாட்டுக் குழுவினரிடம் இது பற்றி ஓ.பி.எஸ். தனி ஆவர்த்தனம் செய்து வருகிறாராம். இதனால் மறுபடியும் எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையே உரசல் வெடிச்சிடுமோன்னு அமைச்சர்களே கவலைப்படுவதாக அதிமுக சீனியர்கள் தெரிவிக்கின்றனர்.