Skip to main content

ஆரம்பத்திலேயே கமலுக்கு சகுனம் சரியில்லை: ராஜேந்திர பாலாஜி

Published on 20/02/2018 | Edited on 20/02/2018


கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரியில்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை நாளை தொடங்க இருக்கிறார்.

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, திமுக தலைவர் கலைஞர், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், உள்ளிட்ட அரசியல் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதேபோல் நடிகர் ரஜினியையும் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.

இதனைதொடர்ந்து இன்று காலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். சீமானுடனான இந்த சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இந்த ஆட்சி சரியில்லை என்று கூறும் நான் அவர்களை எப்படி சந்திப்பேன். நான் அதிமுகவில் யாரையும் சந்திக்கப் போவதில்லை என கூறியிருந்தார்.
|
இந்நிலையில், இதுகுறித்து இன்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரியில்லை. எத்தனை கமல்ஹாசன் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. கட்சி நடத்துவோரிடம் கமல் கட்டிப்படி வைத்தியம் செய்து வருகிறார். கட்சி நடத்துபவர்களிடம் ஆதரவு கோரும் கமலின் முடிவு கேலிக்கூத்தாக முடியுமே தவிர விஸ்வரூபமாக மாறாது.

வயதை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ரஜினி வெளிப்படைத்தன்மை கொண்டவர் என்பதால் கட்சி தொடங்கும் கமலை வாழ்த்தியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மநீம நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Manima Executive Committee, Date Notification for Executive Committee Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23.01.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11:30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தமிழகத்தை விட்டு வெளியேற முடியாது; 45 நாட்களில் குற்றப்பத்திரிகை - ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் செக்

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

'Can't leave Tamilnadu; Charge sheet in 45 days'-Rajendra Balaji again Sec

 

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான அவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

 

ராஜேந்திர பாலாஜி மீது நேரடியாக எந்த இடத்திலும் குற்றச்சாட்டு இல்லாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்றும், அவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகார்கள் சோடிக்கப்பட்டவை என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரு தரப்பு வாதங்களையும் முழுமையாகக் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வாரக் காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் வெளியூர்களுக்கு எங்கும் செல்லக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதித்தனர்.

 

இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கில் தமிழகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 'தமிழ்நாட்டை விட்டு வெளியேற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அனுமதிக்க முடியாது. ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை எனவே நீண்ட காலம் வழங்க முடியாது' எனத் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு 45 நாட்களில் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.