Skip to main content

பிரதமரின் கருத்தை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்

Published on 18/02/2018 | Edited on 18/02/2018
 MK Stalin

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 

"சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது" என்ற பிரதமர் @narendramodi அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.

அதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை "தேசிய நூலாக" அறிவிக்க வேண்டுமெனவும் மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டா கேட்ட பெண்ணுக்கு பளார்... சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்

Published on 23/10/2022 | Edited on 23/10/2022

 

BJP minister caught in controversy

 

நலத்திட்ட உதவிகள் வழங்கும் மேடையில் பாஜக அமைச்சர் ஒருவர் பெண்ணை கன்னத்தில் பளாரென அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் அங்கலா என்னும் கிராமத்தில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கர்நாடகா உள்கட்டுமான மேம்பாட்டுதுறை அமைச்சர் சோமன்னா கலந்து கொண்டார். அப்பொழுது தனக்கு பட்டா வேண்டும் என பெண் ஒருவர் சோமன்னாவின் காலில் விழுந்து கதறி அழுதார். அப்பொழுது கோபமான அமைச்சர் சோமன்னா பளார் என பெண்ணின் கன்னத்தில் அறை விட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் வைரலாகி வருகிறது.