Skip to main content

பா.ஜ.க.வில் இணைகிறாரா ஓ.பி.எஸ்.?

Published on 18/02/2018 | Edited on 18/02/2018
o panneerselvam narendra modi


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் மத்திய மந்திரி பொன்னுசாமி பா.ம.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இந்த நிலையில் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி சனிக்கிழமை டெல்லியில் உள்ள பாஜக தலைமையில் அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னியிலையில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர், பிரதமர் மோடி கூறியதால்தான் பிரிந்த அணியுடன் இணைந்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது பற்றி மத்திய மந்திரியிடம் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 

pon radhakrishnan



அதற்கு அவர், ‘ஆட்சியில் இருக்கிறவர்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் அவர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டுக்கும் நல்லது. பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் ஏன் சுட்டிக்காட்டுகிறார் என்று தெரியவில்லை’ என்று கூறினார்.


அதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் இணைய திட்டம் ஏதும் உள்ளதா? என்ற கேள்விக்கு, ‘யார் யார் எங்கு வந்து சேரப்போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

ம.நீ.ம. முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன் தி.மு.க.வில் இணைந்தார்! (படங்கள்)

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். இந்த நிலையில் அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

 

சென்னையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (08/07/2021) மாலை 05.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் டாக்டர் மகேந்திரன் தி.மு.க.வில் இணைந்தார்.

 

அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தேர்தல் அறிவித்த போதே மகேந்திரனை எதிர்பார்த்தேன். கொங்கு மண்டலத்தில் தி.மு.க. எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததை நினைத்து வருத்தப்படுகிறேன். லேட் ஆனாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். தேர்தலுக்கு முன் மகேந்திரன் போன்றோர் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும்" எனத் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க.வின் பொருளாளரும், அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.


 

Next Story

"தலைவாவுக்கு விருது" - பிரதமர் மோடி மகிழ்ச்சி

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

rajnikanth modi

 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்திற்கு, இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் பழனிசாமி, ரஜினிகாந்தின் நண்பரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ரஜினியை ‘தலைவா’ என புகழ்ந்துள்ளார். மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பல தலைமுறைகளிடையே பிரபலம், சிலரால் மட்டுமே பெருமையாக சொல்லிக்கொள்ளக்கூடிய பணிகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள், அன்பான ஆளுமை அதுதான் ரஜினிகாந்த். தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். அவருக்கு எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.