Skip to main content

நீ சண்டையை விடவே மாட்டியா? என அவர் கேட்பார்" - விஷால் 

Published on 15/01/2022 | Edited on 15/01/2022
fdgdsbg

 

எது தேவையோ அதுவே தர்மம் குறும்படம் மூலம் பிரபலமான அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜனவரி 26 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷால் பேசும்போது...

 

"கரோனாவின் இக்கட்டான சூழலில் இந்த விழா நடத்துவது குறித்து தயக்கம் இருந்தது. து.ப.சரவணனின் 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற குறும் படம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அவரை கூப்பிட்டு பாராட்டினேன். அவரிடம், நல்ல கதை இருந்தால் கூறுங்கள் என்றேன். அப்படி உருவானது தான் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் எனக்கு பிடித்தது கதையை விட திரைக்கதை தான். புதிய இயக்குனருக்குள் இருக்கும் வெறியைப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை குடுத்திருக்கிறேன். சரவணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

 

புது இயக்குனரிடம் நல்ல கதையை கேட்டு விட்டால், யுவன் தான் இசையமைப்பாளர் என்று கூறுவேன். இப் படத்திருக்கும் அதேபோல் யுவன் தான் மியூசிக். நாயகி டிம்பிளை ஒரு விழாவில் எடுத்த ஸ்டில்லை பார்த்து ஒப்பந்தம் செய்தோம். அவரை இப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். தமிழில் நீண்ட தூரம் பயணிப்பார் என்பதில் சந்தேகமில்லை. நாயகனை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் சில படங்கள் தான் வெற்றியடையும். ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் குடுக்கப்பட்டு எடுக்கப்படும் படம் அனைத்துமே வெற்றியடையும். அந்த வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெரும்.

 

ரவீனாவை என்னைப்போல் யாரும் படப்பிடிப்பில் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டார்கள். திறமையாக நடித்திருந்தார். மாரிமுத்து எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் அழ வைத்து விடுவார். மாரிமுத்து என்னிடம், நீ சண்டையை விடவே மாட்டியா? என்பார். அதை எதிரி தான் முடிவு செய்யணும் என்று கூறுவேன். இது தான் படத்தின் கரு. வாசுகி என்னுடைய நெருங்கிய தோழி. என் பெற்றோர், மேலாளரை விட நான் படப்பிடிப்பிற்கு சென்றேனா இல்லையா என்று வாசுகி தான் முதலில் விசாரிப்பார். என்னைப் பொறுத்தவரை கமலா சினிமாஸ் திரையரங்கம் இல்லை. கோவில். என்னுடைய ரசிகர்கள் எப்போதும் என்னுடைய நண்பர்கள் என்று தான் கூறுவேன்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்