Skip to main content

இந்தியில் ரீமேக்காகும் விஜய் சேதுபதி படம்!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

96

 

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் '96'. இப்படத்தில் விஜய் சேதுபதி ராம் கதாபாத்திரத்திலும், த்ரிஷா ஜானு என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில், '96' திரைப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் சேதுபதி, "ஒரு நடிகராக ரசிகர்களின் ரசனைக்கு ஒத்துப்போகும் கதைகளைச் சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். அந்தக் கதை அதிக ரசிகர்களைச் சென்றடையும்போது அந்த மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது. '96' படம் எனக்கு அற்புதமான அனுபவமாக இருந்தது. இப்போது தயாரிப்பாளர் அஜய் கபூர் அந்தப் பயணத்தை இந்தி ரீமேக்கில் தொடரவிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப்பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழுமையான விவரங்களை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்