Skip to main content

"அதுக்கும் தடுப்பூசி கண்டுபிடிச்சா..."- விஜய் சேதுபதி ட்வீட்!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020
vjs


உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.


வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பலரின் வேலைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தினக்கூலியை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது.

இதனை தவிர்க்க பல பிரபலங்கள், பல அறக்கட்டளைகள் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில், இந்திய முழுவதும் மது கடைகளை ஆங்காங்கே திறந்து வருகின்றனர். தமிழகத்திலும் வருகின்ற 7ஆம் தேதி மது கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில்,  "பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபுடிச்சா எவ்வளவு நல்ல இருக்கும்... ஓ மை கடவுளே!" என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்