Skip to main content

கோலிவுட் , டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட் - ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Vijay Sethupathi will be the villain for Shahrukh Khan in 'jawan' movie

 

தமிழில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வளம் வரும் அட்லீ தற்போது பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் படம் 'ஜவான்'. 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கும் இப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் 'ஜவான்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ராணா டகுபதியை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு முயற்சித்ததாகவும், ராணா டகுபதி அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனால் விஜய் சேதுபதியிடம் தற்போது படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில், ஷாருக்கான் விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசும் பழைய வீடியோவை தற்போது அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் தமிழ், தெலுங்கை தொடர்ந்து தற்போது இந்தியிலும் வில்லனாக களமிறங்கவுள்ளார் விஜய்சேதுபதி. 

 

 

சார்ந்த செய்திகள்