நடிகர் விஜய், படங்களைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக நின்று 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம், அம்பேத்கர் சிலை மற்றும் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களின் பிறந்த நாளன்று தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அண்மையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு வேளை மதிய உணவு இலவசமாக பல்வேறு இடங்களில் வழங்கினர்.
இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து பரிசளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு வருகிற 17 ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே கான்வென்ஷ்னல் மையத்தில் (R.K Convention Centre) விஜய் ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவிகளின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழுடன் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்தவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
• அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக @TVMIoffl ,
வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று சென்னை நீலாங்கரையில் உள்ள "RK Convention Centre-ல்" 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்… pic.twitter.com/OCc1eiX6UV— Bussy Anand (@BussyAnand) June 7, 2023