Skip to main content

அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் விஷால்

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

Veeramae Vaagai Soodum teaser goes viral

 

‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

 

இப்படத்தின் டீசரை கிறிஸ்துமஸ் (27.12.2021) தினத்தன்று படக்குழு வெளியிட்டது. அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் சாமானியனாக விஷால் நடித்துள்ள இப்படத்தின் டீசர் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது. மேலும் இந்த டீசர் 5 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் சாதனை படைத்துள்ளது. இப்படம் ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்