Skip to main content

விஷாலின் கிறிஸ்துமஸ் விருந்து... உற்சாகத்தில் ரசிகர்கள் !

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

veeramae vaagai soodum movie teaser release date announced

 

‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

 

ad

 

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'வீரமே வாகை சூடும்' படத்தின் டீசரை நாளை(25.12.2021) வெளியிட உள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைத்துள்ளனர். சமீபத்தில் யுவனின் இசையில் வெளியான படத்தின் தீம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படம் ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்