Skip to main content

'வலிமை' படத்தின் நீளத்தை குறைத்த படக்குழு!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

valimai movie scenes deleted

 

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து படம்  வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கட்டவுட்டிற்கு பால் ஊற்றியும் திரையரங்கில் 'வலிமை'யை கொண்டாடி வருகின்றனர்.  'வலிமை' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், படத்தின் சண்டைக் காட்சிகளும், பைக் ரேஸ் கட்சிகளும் அஜித் ரசிகர்களை கவர்ந்து. இருப்பினும் படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். 

 

இந்நிலையில் 'வலிமை' படக்குழு படத்தின் நீளத்தை குறைத்துள்ளது. அதன்படி, 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடக்கூடிய வலிமை திரைப்படத்திலிருந்து 12.5 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் 'வலிமை' படத்தில் "நாங்க வேற மாறி..." பாடலையும் படக்குழு நீக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. காட்சிகள் நீக்கப்பட்ட படமானது இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 'வலிமை' படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் ரூ. 70 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது அஜித்தின் முந்தைய படங்களை விட அதிகம் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்