Skip to main content

‘துக்ளக் தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
vjs

 

விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார், அதில் ஒரு படம்தான்  ‘துக்ளக் தர்பார்’.  புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தை இயக்க, ஆர். பார்த்திபன், அதித்திராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை செவன் ஸ்கிரீன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் வியாகாம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். விஜய் சேதுபதியின் '96' படத்தை தொடர்ந்து கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அண்மையில் இப்படம் குறித்து செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் அப்டேட் வெளியிட்டது. அதில், இப்படத்தின் ஷூட்டிங் 35 நாட்கள் மட்டுமே முடிவடைந்திருப்பதாகவும் மீதம் 40 நாட்களுக்கு ஷூட்டிங் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தது. 

 

 

இந்நிலையில் இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 

 

சார்ந்த செய்திகள்