Skip to main content

“இதற்கெல்லாம் சாதி தேவையில்லை” - இயக்குநர் இசக்கி கார்வண்ணன்

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

 “There is no need for caste” - Director Isakki Karvannan

 

தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குநர் எனப் பெயரெடுத்த சேரன் கதாநாயகனாக நடித்து செப்டம்பர் 7 அன்று வெளிவரவுள்ள படம் 'தமிழ்குடிமகன்'. இந்தப் படத்தை தயாரித்து இயக்கியவர் இசக்கி கார்வண்ணன். படத்தில் சேரன், மலையாள நடிகர் லால், அருள்தாஸ், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் போன்றவர்கள் நடிக்க சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார்.

 

இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் சேரன் பேசுகையில், "இந்த திரைப்படத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல், யாரையும் காயப்படுத்தாமல், புண்படுத்தாமல் ஒரு சமரசமான முயற்சிக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு காட்டிய, ஆதரவு காட்டிக்கொண்டிருக்கிற, இனிமேலும் ஆதரவு காட்டும் அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. வணக்கம்." எனப் பேசினார். 

 

தொடர்ந்து, பேசிய நடிகர் அருள்தாஸ், "இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய படமாக இருக்கும்" என்றார். பின்னர், படத்தில் நடித்த அசல் நாடக கலைஞர் ராதாகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் பேசிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன், "இந்த படத்தின் மையக்கரு உண்பதற்கு உணவு, உடுத்த உடை, வாழ இடம். இதற்கு சாதி தேவை இல்லை என்பது தான். நீங்களும் இதுபோலவே எண்ணுவீர்கள் என நினைக்கிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்