Skip to main content

போஸ்டருடன் புதிய அப்டேட்டை வெளியிட்ட 'தளபதி 66' படக்குழு

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

'Thalapathy 66' crew released a new update with the poster

 

விஜய், 'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படம் குடும்ப பின்னணி படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 

 

இந்நிலையில் 'தளபதி 66' படக்குழு அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் படத்தில் இடம்பெறும் முக்கியமான காட்சியின் படப்பிடிப்பை முடித்துள்ளோம். அடுத்தகட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 


 

சார்ந்த செய்திகள்