Skip to main content

தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட தமன்னா ! 

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

 

சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதன் முதலாகக் கண்டறியப்பட்டு, உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது.இதனால் நடிகர்கள் பலரும் பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி வீடியோக்களின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது நடிகை தமன்னா கரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

fsf

 

''நம்மால் கோவிட்19 வைரசை எளிதாக ஜெயிக்க முடியும்.அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்னச் சின்ன விஷயங்கள்தான்.நாம் அனைவரும் இந்த நேரத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும்.இப்போது அதுதான் நமக்கு பாதுகாப்பு.கரோனா வைரசிடம் இருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கையில்தான் இருக்கிறது.எனவே அரசாங்கம் சொல்வதைக் கேளுங்கள்.சோப்பைப் பயன்படுத்தி கைகளைக் கழுவுங்கள்.விலகி நின்று ஒன்றிணைவோம்.கரோனா வைரசை ஒழிப்போம்'' எனத் தமிழில் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்