Skip to main content

பெண் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா ரசிகர் மன்றம்...

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

பெரும்பாலான ரசிகர்களை கொண்ட நடிகர்களின் படம் வெளியாகும் முதல் நாள் அன்று முதல் காட்சி இல்லாமல், ரசிகர்கள் காட்சி என்று ஒரு காட்சி திரையிடப்படும். அந்த காட்சியில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் ஆனால் பெரும்பாலும் ஆண்கள்தான் பார்ப்பார்கள். ஆண் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பின்மை காரணமாக பெண்கள் யாரும் அந்த காட்சிகளுக்கு பார்க்க வரமாட்டார்கள். சூர்யாவின் என்ஜிகே படத்தைப் பார்க்க பெண் ரசிகர்களுக்கு என்று கேரளாவில் தனி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

ngk


செல்வராகவன் இயக்கத்தில் முதன் முறையாக சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே. இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் சூர்யாவுடன் நடிக்கிறார்கள். 
 

natpuna


எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. அரசியல் த்ரில்லாரக எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 

வருகிற 31-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது. தமிழில் உருவக்காப்பட்டுள்ள இந்தப் படம், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. சூர்யா - செல்வராகவன் - யுவன் கூட்டணி என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
 

mr local


கேரளாவில் தமிழ் நடிகர்களில் விஜய்க்கு அடுத்து சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், குறிப்பாக பெண்கள் ரசிகர்கள். அதனால் என்ஜிகே படத்தைப் பார்ப்பதற்காக கேரளாவில் உள்ள பெண் ரசிகைகளுக்கு என தனி ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றமும், மலப்புரம் வி1000 லவ்வர்ஸ் லேடீஸ் யூனிட்டும் சேர்ந்து இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். மே 31-ம் தேதி காலை 10.30 மணிக்கு, சங்கரம்குளத்திலுள்ள மார்ஸ் சினிமாஸில் இந்த ஷோ நடைபெறவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்