Skip to main content

ஆஸ்கர் வென்ற நிறுவனத்துடன் இணையும் சூர்யா!

Published on 04/03/2019 | Edited on 04/03/2019
surya


துரோகி, இறுதிச்சுற்று ஆகிய படங்களை இயக்கியர் சுதா கொங்காரா. தற்போது இவரது இயக்கத்தில் சூர்யா நடிக்க தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். 
 

செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே, கே.வி. ஆனந்த இயக்கத்தில் காப்பான் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்த சூர்யா, தற்போது சுதா கொங்காரா படத்தின் மேல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படத்தை உருவாக்கவுள்ளார் சுதா கொங்காரா. 
 

சுதா இயக்க இருக்கும் சூர்யா 38 படத்தை சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளது. மேலும் இவர்களுடன் குனித் மோங்காவும் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார். ஜி.ஆர்.கோபிநாத் மையப்படுத்திய புத்தகத்தின் உரிமை குனித் மோங்காவிடம் உள்ளதால் இவர்களுடன் இணைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. குனித் மோங்காவும் 2டி தயாரிப்பு நிறுவனமும் இணைந்து அடுத்த படத்தை தயாரிப்பதை 2டி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.
 

இதற்கு முன்னர் குனித் மோங்கா பாலிவுட்டில் பல படங்களை தயாரித்திருக்கிறார். அவற்றில் பல படங்கள் உலக திரைப்பட திருவிழாக்களில் கலந்துகொண்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வருடம் குறு ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் விருதை பெற்ற பிரீயட். எண்ட் ஆஃப் செண்டன்ஸ் என்ற படம் இவர்கள் தயாரிப்பில் உருவானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்